பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#6)

20. க நா. சு. கருத்து

1963 இறுதியில் தோன்றியது க. நா. சுப்ரமண்யத்தின் "இலக்கிய வட்டம் மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது. r *இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன-இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம் பத்திரிகையில், நமக்கு நாமே பல விஷயங்களேயும் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்ப தற்காக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன், அதன் ஆசிரியரும் மற்றும் சில எழுத்தாளர்களும் எழுதிக் கொண் டிருந்தார்கள். அதனுல், இலக்கிய வட்டம் நல்ல இலக்கிய பத்திரிக்கையாக விளங்கியது. எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரியர்களுக்கும் பயன்படக்கூடிய அருமையான விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாயின, இ. வ. சுவாரஸ்யமான ஒரு இலக்கிய ஏடு ஆகவும் வளர்ந்து வந்தது. -

அது ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் உயிரோ டிருந்தது என்று நினைக்கிறேன். - -

"இலக்கிய வட்டம் புதுக்கவிதையையும் ஒரு சோதனைத் துறை ஆகத்தான் கருதியது. பிச்சமூர்த்தியின் ப்டைப்பு கஜின புதுக் கவிதை'யாக அது அங்கீகரிக்கவில்லை. --

அதன் 25வது இதழில் வெளிவந்த அபிப்பிராயம் இது

புதுக் கவிதை

ஏனய்யா இந்த மாதிரிக் கவிதையல்லாத கவிதைகளே யெல்லாம் போட்டு எங்கள் பிராணனே வாங்குகிறீர்?' என்று ஒரு நண்பர் புதுக்கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக் கேட்டுள்ளார். - ---

மணிக்கொடி காலத்தில் சொ. வி. புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில்,