பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369

கவிதைப் பொருள்களாக எடுத்தாண்டார்கள் என்று குறை கூறப்படுவது உண்டு. அது தவருண மதிப்பீடேயாகும்,

சோதனை ரீதியாகப் புதுக்கவிதைப் படைப்பில் ஈடு பட்டவர்கள் சகல விஷயங்களையும் விசாலப் பார்வையில்ை தொட முயன்றிருக்கிருர்கள் என்பதை எழுத்து காலக் கவிதைகளே ஆராய்கிறவர் உணர முடியும். -

1965-ல் சீன இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்த போது, நாடு பற்றி வரலாற்று ரீதியான நோக்கும், போர் பற்றிய சிந்தனையும் கொண்ட கவிதைகளை எழுத்து’ பிரசுரித்துள்ளது.

இவற்றில் எஸ். வைதீஸ்வரன் எழுதிய நாடு என் உயிர்’ எனும் கவிதையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதன் சிறப்பையும், அதில் காணப்படும் நயங்களையும் கருதி, அதை முழுமையாகவே இங்கு, எடுத்தெழுதுகிறேன். .

நாடு என் ചി நாடு என் நிழல் நாடு என் உடல்

பனி கமழ் கூந்தல் திரு நதிச் சீல கடல் அணி பாதம் என் தாயின் தனியழகு.

பரந்த நிலம் விரிமனதில் வேர்விட்ட ஞானம் - பேச்சிலோர் அமைதி பிறழாத தன்மை என் தாயின் தனி இயல்பு.

யுகம் யுகமாய் முகம் மலர

கபடமின்றி வரவேற்று . பொன் கொடுத்துக் கலை பகிர்ந்து தாளிடாத மாளிகைக்குள் - புகலிடம் தந்த கரம் , 丛

என் தாயின் தனிப் பண்பு.