பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இன்று நாம் எழுப்பும் புதுக்குரல்கள், நேரில் காணும் நிஜ உணர்வுகள், காலத்தில் ஊற்றெடுத்த வீரமும் வீரத்தில் சிந்தி விட்ட ரத்தமும் வீணல்ல; அதர்மம் மாய்க்க மண்ணில் கண்ணன் நிகழ்த்திய காவியமும் கால மலைப்புதரில் ஒடித்திரிந்து உடலே இரும்பாக்கி பெற்ற வீரப் போர் முறைகளும் வெற்றிக்குத் துணையாச்சு,

سمهوري

(எழுத்து 84-1965)

அறுபதுகளின் பாரதப் போரை புராதன பாரதப் போருடன் உவமித்து சு. சங்கரசுப்ரமண்யன் பாரதப் போர்’ என்ற கவிதையை எழுதியுள்ளார். ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பேயாகும் அது.

பொய்ப்புழுதி கிளப்பி பாவக்குருதி சிந்தி தன்வினை தின்னும் பகைக் கூத்து தாய்மடி அறுக்கும் தறுதலே ஆட்டம் சரித்திர சாபத்தின் அந்திமப் புலம்பல் உடமை மறுத்தது பழங்கதை பிறப்பு உரிமை பறிப்பது புதுக்காவிய வித்து நாமே பாண்டவர் பண்டு ஆண்டவர் அவரோ கவரவர் கவரும் பண்பினர் சூதை வளர்க்கும் சகுனிச் சீனன் கீதை உரைக்கும் சாரதித் துங்கு தூது பொய்த்திடும் தீயோர் மன்றம் களமோ பெரிது காணும் உலகே குருக்ஷேத்திரம். (எழுத்து 84) சி. சு. செல்லப்பா வேருெரு கோணத்தில் அந்த சரித்திர நிகழ்ச்சியைத் கண்டு பகைத் தொழில்’ எனும் கவிதையை எழுதியிருக்கிருர், -

கிழிபடு போர், கொலே, தண்டம் பின்னியே கிடக்கும் அரசியலதனில்: கொலேவழி உதறி அறவழியாலே