பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#73

கதிகாண வழிவகை காட்டிக் கிழக்கே பகைத்தொழில் மறக்க வைத்த முதல்வன் ஒத்துழையாழையான் காலமும் போச்சு; அழிசெய் நியூகிளியர் ஆயுத்ம் ஓங்கியே சீறிடும் ரட்சகர் கையில் அருள்வழி சிதற மறவழி பற்றி கதிகலங்கச் சதிவகைகள் செய்து கொடுந்தொழில் பரவச் செய்யும் மேற்கே. ஒத்துப்போகார் காலமும் ஆச்சு: என்று நாம் கணித்திருக்கும் வேளை அண்டை நட்பும் சகவாழ்வும் கானல் நீராச்சு; வரம் கொடுத்த தலமேலே கைவைக்க் எல்லேயில் முழுவடிவைத் தின்ன வந்த பிறை வடிவோன் "பாய் பாய் குளிரப் பேசி பழம்ை பாசம் பேசி பசப்பி விளிம்பில் இமயப் பாய் சுருட்ட வந்தோன் சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து நடுக்கட்லில்

- நின்று ஊளையிடும் நம்பெயர் பாதி கொண்ட உதிரித் தீவோன் முக்கூட்டாய்ச் சேர்ந்து பகைத் தொழில் வளர்க்க புறப்பட்ட கதையே இன்றைய நிஜமர்ச்சு. உழக்கிலே கிழக்கு மேற்கா? கிழக்கிலும் மேற்கு, மேற்கிலும் கிழக்கு பகைத் தொழிலுக்கா காலம்? - - ته تا-... (எழுத்து-85)

22. சி. மணி

புதுக் கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான స్త్రో இடம் உண்டு.

1952ல் நரகம்’ என்ற நெடுங் கவிதையை உருவாக்கி, தனது படைப்பாற்றலேயும், சொல்லாட்சியையும், பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும், கற்பனை வளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப்புறத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமான முடிவுகளுக்கு வருகின்ற மனப் பக்குவத்தையும் நிருபித்துக் காட்டிய சி. மணி