பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

இமைப்பிலா விழிப்புடன் நடிகன் நடிக்கட்டுமே. ஒருமுறை கூடவா உணர்வுடன் புணர்ந்து தன்னே மறக்க மாட்டான்? மறந்து கலக்க மாட்டான். நடிப்பு மறைந்து சொந்தம் கலப்பது அறிவது அருமை. கலப்பது அரிதல்ல. புறவயப் பார்வை அழிப்பதல்ல அகத்தை; தட்டி பிழைப்பதில்லை கவிஞன் தன்நிழல். (சி. மணியின் கவிதைகள் 'வரும் போகும்', 'ஒளிச் சேர்க்கை என்று இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.)

23. பிந்திய விளைவுகள்

புதுக் கவிதை தரமான வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தபோதே - அந்தக் காரணத்தினுலேயே - அதற்கு எதிர்ப்பும் கிண்டலும் எழுத்தாளர்கள் மத்தியிலும்

பத்திரிகையிலும் மீண்டும் தலைகாட்டின. 1966-67ல்.

'தீபம்’ பத்திரிகை மாதம்தோறும் இலக்கிய சந்திப்பு நடத்திய எழுத்தாளர்களிடம் ‘புதுக் கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியைத் தவருது கேட்டு வந்தது. பேட்டி அளித்த இலக்கியவாதிகளும் புதுக் கவிதையைக் குறை கூறியும், யாப்பில்லாக் கவிதை எழுதுகிறவர்களைத் தாக்கியும் கண்டித்தும் தங்களது மேலான அபிப்பிராயங்களே? அறிவித்துக் கொண்டிருந் தார்கள். -

அவ்வாறு கருத்துக் கூறியவர்களில், எழுத்தாளர் கு. அழகிரிசாமி புதுக்கவிதைக்காரர்கள் பற்றி முரட்டடி யாக அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்; நான் பார்த்த புதுக் கவிதைகளே எழுதியவர்களுக்குக் கவிதையைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இலக்கியத்தைப் பற்றிக்