பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

நெல்ல நாறப் புழுக்குருனே அவனைப் படியில் உருட்டி விடு, இ8ளத்தவன் வயிற்றில் சொடுக்குருனே அவனைக் குழியில் இறக்கி விடு - மஞ்சள் இதழில் பச்சை கிறுக்குருனே அவனே பனை மரத்தில் தொங்கவிடு. உதைத்துக் கொள்ளட்டும். துள்ளல் அடங்கட்டும், புரட்சிக் காற்றே! இவற்றைக் காண விழைந்த என் துணை இதோ, இங்கே நிலப்படுக்கையில், எனக்காகமல்லிகை மலர்களைத் துவ மாட்டாயா? மெல்லமெல்லத் துரவு, நோகாமல் துவு.

z (எ. 116)

அயல்நாடுகளின் கவிதைகள் பல தமிழாக்கப் பெற்று வெளியிடப்பட்டன. வேருெரு விஷயத்தையும் குறிப்பிட ல்ாம் என்று நினைக்கிறேன். எழுத்து 97-ஆம் இதழில் வல்விக்கண்ணனின் உன் கண்கள் வந்திருந்தது.

சூழ்நிலைப் பாலையில் வாழ்க்கை வெயிலில் சுற்றித் திரியும் என் கண்களுக்கு குளுகுளு ஒயாஸிஸ் ஆயின, அன்பே உன்னிரு விழிகள்.

அலுவல் அலகளில் எற்றுண்டு. இடறி காகிதக் கடலில் புரண்டு தவிக்கும் என் விழிகள் தங்கி இன்புற பசுமைத் தீவாய் உதவும், பெண்ணே! உன் ஒளிக் கண்கள். புது-13 -