பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

பயிற்சியும் புது கவிதைப் படைப்பில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்த சி. மணிதான் செல்வம் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். (சி. மணி என்பதே புனை பெயர்தான்.) செல்வம் என்று இலக்கிய பிரச்னைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதிய அவர் "நடை"யில் வே. மாலி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினர். ஆகவே, "நடையில் சி. மணியின் சாதனைகளே மிக அதிகமானவை. "நடை"யின் முதன்மையான-முக்கியமான சாதனை அதன் மூன்ருவது இதழில் 'யாப்பியல்’ என்ற கட்டுரையை (52 பக்கங்கள்) இணைப்பாக வெளியிட்டது ஆகும். இந்த யாப்பியலே எழுதியவர் செல்வம் இது பயனுள்ள ஆய்வும் விளக்கமும் ஆகும். யாப்பின் உறுப்புகளான எழுத்து அசை, தீர், தளை, அடி, பற்றிய இலக்கணம், பாவினம், பாவகைகள் பற்றிய விளக்கங்கள், யாப்பு இலக்கணம் படைப்பாளிக்குத்தரும் உரிமைகள், நெகிழ்ச்சிகள்; இவை போதாமல் படைப்போர் மேலும் பயன்படுத்தும் உரிமைகள் பற்றி எல்லாம் செல்வம் தெளிவாகவும் எளிய நடையில் விளக்கமாகவும் விவரித்திருக்கிருர், இக்கட்டுரையில்,

‘யாப்பையும் மரபையும் மீறியதாகப் புதுக்கவிஞர்கள் கூறுவதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை; அவர்கள் மீறியே விட்டதாக நினைத்துக்கொண்டு பலர் புறக்கணிப்பதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லே, இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பலவகைச் சீர்களைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்ருல் சீர்வகையிலும் எண்ணிக்கையிலும் கருத்து வேறுபாடு உண்டு. மேலும் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும், எல்லாப் பாவின வகைக்கும் நிச்சயமான சீர்வகை வரையறை இல்லை. எனவே சீர் மயக்கம் புதிதல்ல; மரபானதே.

பலவகைத் த8ளகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்ருல், வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் பாவின வகைக்கும் த8ளவரையறை இல்லை. எனவே, தளைமயக்கம் புதிதல்ல; மரபானதே. பலவகை