பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

காலத்திலோ நிறைய செய்யுள் தோன்றிப் பயனில்அல. நிறையப் பாடல் தோன்றியும் பயனில்லை, நிறைய கவிதை தோன்ற வேண்டும். ஏனென்ருல் பாவில், மூன்றிலும் தலைசிறந்தது கவிதை தான்.

இன்று வறண்ட செய்யுளும், சற்றே பசுமையான பாடலும், கட்டுக் குலைந்த கவிதையுமே மிகுதியாக வெளி வருகின்றன. பாக்களே கவிதையாகத் திடி, பிழைக் கின்றன. இன்றைய இலக்கியச் சிறப்புக்கு இக் கவிதைகள் போதாது என்றே சொல்ல வேண்டும்.

கவிஞர் புதுக்கவிஞர் என்னும் இரு வகையினரும் உருவம், உள்ளடக்கம் என்னும் இரண்டிலும் சமமான கவனம் செலுத்துவதில்லை. கவிஞரின் கவனம் உருவத் தைச் சார்கிறது. புதுக் கவிஞரின் கவனம் உள் ளடக்கத்தையும் நோக்கிச் செல்லாத காரணத்தால், உன், பக்கத்தில் புதுமையும் இறுக்கமும் இல்லாமல் வறட்சியே தெரிகிறது. புதுக்கவிஞரின் கவனம் உருவத்தையும்நோக்கிச் செல்லாத காரணத்தால், உருவத்தில் கட்டுக் கோப்பு இல்லாமல் தளர்ச்சியே தெரிகிறது. இக் குறைகளை நீக்குவதற்குக் கவிஞரும் புதுக்கவிஞரும் உருவம் உள்ள டக்கம் இரண்டிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும், உருவத்தை கவனிக்கிற அளவு உள்ளடக்கத்தையும் கவிஞர் கவனிக்க வேண்டும், உள்ளடக்கத்தையும் கவனிக்கிற அளவு உருவத்தையும் புதுக்கவிஞர் கவனிக்க வேண்டும் என்று யாப்பிய லில் செல்வம் வலியுறுத்தி யிருக்கிருர். இது படைப்பாளிகள் நினைவில் நிறுத்திச் கொள்ளத் தகுந்த கருத்து ஆகும்.

நடை'யில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதைகளில் பெரும் பான்மையானவை உள்ளடக்கப் புதுமையோடு, உருவ அமைதியும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு படைக்கப் பட்டவை என்றே தோன்றுகின்றன.

சி. மணி (செல்வம்), வே. மாலி என்ற பெயரில் கவிதைகள் படைத்தபோது, புதுமையான உள்ளடக்கத்