பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

(தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்) புகையூதி ரயில்வண்டி எழும்பூர் நீங்கும்; பேச்சாளர் மனதில்...கையொலிகள் கேட்டும். என்று தொடங்கி வளரும் பரிசில் வாழ்க்கை' பேச்சாளர் தன்மையையும், அவர்கள் வாழ்ந்து வளர்வதற்கு வகை செய்யும் நாட்டு மக்களின் இயல்பையும் சுவையாகச் சித்திரிக்கிறது. .

பிரசங்கிகளின் வாய்ச்சவடாலே கிண்டல் செய்யும் வகையில் ஞானக்கூத்தன் பல கவிதைகள் எழுதியுள்ளார். அப்படிப்பட்டது தான் நடை 4ல் வந்த ஆவதும் என்குலே,யும்.

முதலிலிவர் போட்டியிட்டார் ஜாமின் போச்சு, மறுபடியும் இவர் நின்ருர், எவனெல்லாமோ உதவுவதாய் வாக்களித்துக் கைவிரிச்சான். கடைசி நாள், நான் போனேன். சுவரிலென்பேர் கண்டதனுல் முன் கூட்டி மக்கள் வெள்ளம். கைதட்டல் நானெழுந்து பேசும் போது. ரெண்டு மனி. எதிரிகளைப் பிட்டு வைச்சேன். பத்தாயிரம் வாக்கதிகம். இவர் ஜெயிச்சார், சாவு கொடுத்த கேள்வித்தாள்; தீர்வு, கீழ்வெண்மணி, நாய், செத்த பன்றி, தணல். வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு, கொள்ளிடத்து முதலைகள், படிமத் தொல்லே ஆகிய ஞானக்கூத்தன் கவிதைகள் "நடை"யில் வந்தவைதான், - .

பேச்சில் அடிபடுகிற சாதாரண வழக்குச் சொற் களைக் கோத்து உயிரும் உணர்ச்சியும் வேகமும் உள்ள கவிதைகள்ேப் படைத்துவிடும் திறமை ஞானக்கூத்தனுக்கு இருக்கிறது. இதை "நடை"யில் வந்த கவிதைகள் எடுத்துக் காட்டின. பரிகாசத் தொனி அவர் கவிதைக்குத் தனித் தன்மை சேர்க்கிறது. - .

பாகிஸ்தானி சொல்ருளும், பயந்தாங் கொள்ளியாம் நாமெல்லாம் சீளுக்காரன் சொல்ருளும் . . . . . .