பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

நூலுருண்டை போலிருந்து மேலும் கீழும் தாவி முக்கால் மதுவருந்திப் பேடையுடன் ஆட சீட்டி யடிக்கும் சிறுகுருவி!

வாக்கால் வசமிழந்து தம்மறிவுத் தடமாறி போக்கான பெருவழியை விலகிக் குறுஞ்சந்தில் தம் பெருமை பேசும் தம்பட்டம்!

ஆறறிவு படைத்தோம் அஃறிணையுமல்லோம் ஆண்டவனின் அருமந்த புத்ரர் யாம் எனச்சொல்லி வெள்ளிச் செருப்புமுன் செய் வணக்கம்!

அநுமானப் போலத் தன் வலிமை யுணராமல் தினமுழைத்தும் திவலைச் சுகம் காணுமல் தரமிழிந்து வாழும் வாழ்வு:

பனையோலேக் குடிலுக்குள் பிரித் தொதுக்கித் தள்ளப்பட்ட பறைச்சிப் பெண் மார்பில்

பால்!

அவரது நொடிகள் கவிதை அழகும் கருத்து நயமும் சேர்ந்து மிளிரும் அற்புதப் படைப்பு.

கடிகாரம் இடையருது

தட்டித் தவிக்கும்

பிடிவாதக் குழந்தைகள்

என்றும்,

'முத்தாயிரம் கோத்த

மணியாரச் சரட்டில்

முத்திடை மின்னும்

தத்துவத் துண்டுகள்’ என்றும் நொடிகள்’ பற்றி வியந்து வளரும் இம் மணிக் கவி தை படித்துப் படித்து ரசிக்கப் பட வேண்டிய ஒன்று, அதைப் பூரணமாக எடுத்தெழுத வேண்டும் என்ற ఆ ఐశ్లో எனக்கு உண்டாகிறது. ஆல்ை, கவிதையின் நீளம் ( பக்கங்கள்) கருதி விட்டு விடுகிறேன். . * . .