பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

முடிவ முக்கியம்?, எண்ணிப்பாரு சும்மா ஒரு புத்தகம், அப்படியா தோணுது? ஆகியவை வ. க. கவிதைகள்.

ஷண்முக சுப்பய்யாவின் கவிதைகள் குழந்தைக் கவிதைகள்’ என அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வெறும் ஒசை நயத்தை முதன்மையாகக் கொண்ட குழந்தைப் பாடல்களே அவர் அதிகம் எழுதியிருக்கிருர்.

பச்சைக் கார்

பாரப்பா பார் அதோ ஓர் பச்சைக் கார் அது பொப்பப்போ போடாமல் போவதெங்கே சொல்லப்பா

போன்றவை உதாரணமாகலாம். ஆகுலும் அவர் வார்த்தை ஜாலங்கள் செய்வதோடு நின்று விடுவதில்லை. கசப்பான வாழ்க்கை அனுபவங்களேயும் உலகநியதிகளையும் சிறு சிறு கவிதைகளாகப் படைத்திருக்கிரும்.

செல்லப் பிள் இர

செல்லப்பா

செல்வந்தராம்

அவனப்பா.

அதல்ை வந்த இறுமாப்பால் . . அவன் சொல்வதெல்லாம் வீராப்பே, அதைச் சொல்லப் போளுல் பொல்லாப்பே

என்று அறிவிக்கும் செல்லப்பிள்ளை, மற்றும் குச்சுநாய், வயிற்றைக்கேள், உலகம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும், வயிற்றைக்கேள்' ரசமானது.