பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தடவை ஈடுபடலாம். பொதுவாகப் பார்த்தால், இது வீண் வேலை என்றே நான் கருதுகிறேன்.

குருக்ஷேத்திரம் என்ற இலக்கியத் தொகுப்பு 1988ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு எந்தத் தொகுப்பும் வரவில்லை. இது போன்ற தொகுப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிரசுரிக்கப்பட்டால் இலக்கியத்துக்கும் படைப் பாளிகளுக்கும் நல்லது. இலக்கிய ரசிகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அது சாத்தியப்படாவிட்டால் தரமான இலக்கியத் தொகுப்பு வருஷத்துக்கு ஒன்ருவது தயாரித்து வெளியிடப்பட வேண்டும். இலக்கியத்தின் வளர்ச்சியை அளவிடவும், நல்ல படைப்புகளும் புதிய சோதனைகளும் தோன்றவும் அது துணைபுரியும்.

ஆளுல் தமிழ்நாட்டில் இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. எத்தனையோ வகைகளில் துரதிர்ஷ்டம் பிடித்தது தமிழ் மொழி! இதையும் தமிழின் துரதிர்ஷ்டத் தில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

27. எழுத்து வின் கவிதைப்பணி

1959 ஜனவரியில் மாதப் பத்திரிகையாகப் பிறந்தது ‘எழுத்து’. ஒன்பது ஆண்டுகள் மாசிகையாகவே வளர்ந்த அது, பத்தாவது ஆண்டில் ஏப்ரல் முதல் காலாண்டு ஏடு ஆகமாறியது. 1968 மார்ச் முடிய 11 ஏடுகள் மாத இதழ்களாகவும், பின்னர் மும்மாதம் ஒரு முறை ஏடு ஆக 8 இதழ்களும் எழுத்து வெளிவந்தது. 1970 ஜனவரி -மார்ச் இதழாகப் பிரசுரமான 19வது ஏடுதான் எமுத்து"வின் கடைசி இதழ் ஆகும்

இந்தப் பதினுேரு ஆண்டுகளிலும் எழுத்து 450 க்கும் மேற்பட்ட கவிதைகளே பிரசுரித்துள்ளது இவற்றில் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் அடங்கும். எழுத்துவில் வெளிவந்த கவிதைகளே இதுவரை இக்கட்டுரைத் தொடரில் தான் விரிவாகவே அறிமுகம் செய்திருக்கிறேன்.