பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:25

ஆளுல், உண்மையில், சுதந்திரம் பெற்ற பின்னர் தான் - நாட்டின் வளத்துக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் என்று பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி ஏதேதோ சாதிக்கப் பட்டுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிற கால கட்டத்திலே தான்-நாட்டு மக்களிடையே வறுமையும் வெறுமையும், ஏமாற்றமும் ஏக்கமும், வெறுப்பும் விரக்தியும், மனமுறிவும் கையாலாகக் கோபமும் வளர்ந்து பெருகுவதற் கான சூழ்நிலையும் கனத்துக் கொழுத்துள்ளது.

இவற்றிடையே அல்லற்படும் தனி மனிதர்கள், இந் நிலைமைகள் தங்கள் மனதுக்குள் கொண்டு சேர்க்கும் உணர்ச்சிப் பதிவுகளையும் கருத்துச் சுழிப்புகளையும் கவிதை களாக்குவது இயல்பே. இலக்கியம் என்பதே தனி மனித அனுபவ உணர்ச்சிகளின், எண்ணங்களின் வெளிப்பாடு தானே!

இந்த வகையில், எழுத்து காலத்தில் புதுக் கவிதை எழுதியவர்கள் சரியான இலக்கிய உணர்வுடனேயே படைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றே சொல்வேன். அவர்களுடைய வாழ்க்கைப் பார்வையும். மதிப்புகளும், தத்துவ நோக்கும் கோளாருனவை-குறைபாடுகள் உடை யவை - மனித குலத்துக்கு நலம் பயக்க முடியாதவை என்று வேறு நோக்கும் போக்கும் தத்துவ ஈடுபாடுகளும் கொண் டவர்கள் சொல்லலாம்.சொல்கிருர்கள்.

இலக்கியத்தில் பல்வேறு நோக்குகளுக்கும் போக்கு களுக்கும் நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வறட்சிகளுக்கும் கூட-இடம் உண்டு, - - - -

28. பிச்சமூர்த்தி கவிதைகள்

(1659-க்கு பிற்பட்டவை)

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில், 1934-1946 காலத்திய படைப்புகளே இத்தொடரில் ஆராய்ந்தபோது, 1950களில் இயற்றப்பட்ட அவரது கவிதைகளைத் தனியாகக் கவனிக்க