பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். பிச்சமூர்த்தியின் இரண்டாவது காலகட்டக் கவிதைகள் பெரும்பாலும் "எழுத்து இதழ்களிலேயே பிரசுரம் பெற்றன. மிகக் குறை வானவையே நவ இந்தியா சிவாஜி மலர் சுதேசமித்திரன்’ மலர் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

'இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இகணத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள். அறிவொளியும், உணர்வின் ஒட்டமும், அழகு தயங்களும் செறிந்த, ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை:

ந. பி.யின் முதல் கட்டக் கவிதைகள் குறித்து இவ் வாறு கூறியுள்ளேன். அவருடைய பிற்காலக் கவிதைகளும் இதே எண்ணத்தை வலியுறுத்துகின்றன.

இயற்கையின் தரிசனமே வாழ்க்கைக்கு அத்தியாவசிய மான நல்ல வழிவகைகளே உணர்த்தக்கூடும் என்பதில் கவிஞருக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது, இயற்கையே நல்லாசான், சிறந்த வழிகாட்டி, அரிய துனே, உற்ற மருத்து வன் என்று தம் கவிதைகள் மூலம் திரும்பத் திரும்ப எடுத்துக் கூற முற்படுகிருர் கவிஞர். - ‘வாழ்வுக்கு வக்கனே சொல்ல வந்தவர்கள்

வர்த்தகராய், வணிகராய், பண்டமாற்றுப் பரம்பரையாய், உழைப்புக்குக் கூலியும்: உடைக்கு விலையும், நெல்லுக்குப் பண்டமூம் மூச்சுக் கெதிர் மூச்சும் கொடுப்பதை நெறி பாக்கி இருப்பதை ஒளிக்கச் சொன்னர் . ஒன்றைக் கொடுத்து ஒன்பதைக் கொள் என்ருர் .

ஆணுல், தோட்டத்தில் நட்ட செடி என்ன கற்பிக்கிறது?