பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

வதையும்) படித்து, ரசிக்கிறவர்கள். அவர் தரு நல்ல கவிஞர் என்பதையும், கவிதைத் துறையில் அவருடைய சாதனை பெரிது என்பதையும் உணர முடியும்.

29. தாமரை

தமிழ் நாட்டின் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை" யான தாமரை புதுக் கவிதைத் துறையில் "இரண்டாவது அணி' தோன்றி வளரத் துணை புரிந்தது.

தாமரை கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய மாசிகை. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களின் ஆசிரியப் பொறுப்பில் பல வருடங்கள் வளர்ந்தது. அப் போதும், அவரது மரணத்துக்குப் பிறகு மாஜினி ஆசிரிய ராகப் பதவி வகித்த காலத்திலும், தாமரை புதுக் கவிதையில் கவனம் செலுத்தவில்லை. மரபுக் கவிதைகளே மட்டுமே பிரசுரித்து வந்தது. .

பின்னர், ஆசிரியர் குழு ஒன்று பத்திரிகைப் பொறுப்பை மேற்கொண்டது. அந்நிலையிலும் சில வருட காலம் தாமரை புதுக் கவிதையில் அக்கறை கொள்ளாமலே இருந்தது.

பொதுவான இலக்கிய நோக்குக்கு எதிரானது முற் போக்கு இலக்கிய நோக்கு-தனி மனித உணர்வுகளே, மனப்பதிவுகளை, தனி நபர் நோக்கை சித்திரித்துக் கொண் டிருப்பது உண்மையான இலக்கியம் இல்லை; மார்க்ளியே அடிப்படையில், சமுதாயப் பார்வையோடு, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராகவும், உழைக்கும் இனத்துக்கு நம்பிக்கை ஊட்டும் தன்மையிலும் எழுதப்படுபவைதான் இலக்கியம் ஆகும் என்பது தாமரை”யின் கம்யூனிஸ்டு களின் கம்யூனிஸ் அனுதாபிகள் ஆதரவாளர்களின் கொள்கை ஆகும்.

ஆகவே, பொதுவான இலக்கியவாதிகளின் நோக் கையும் போக்கையும் குறை கூறுவதும் கண்டிப்பதும்,