பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அவர்களது படைப்புகளே மார்க்ளியேப் பார்வையில்: திறனுய்வு செய்வதும் தாமரை”யின் முக்கியக் கடமை களில் ஒன்று.

  • தாமரை”யின் ஆசிரியர் குழுவில் முக்கியமான பங்கு கொண்டிருந்த தி. க. சிவசங்கரன் புதுக்கவிதையிலும் ஈடுபாடு உள்ளவர். புதுக் கவிதைப் படைப்புகளை அவர் ரசித்தாலும், அதன் வேக வளர்ச்சியை அவர் வரவேற்ற போதிலும், புதுக்கவிதையின் உள்ளடக்கம் அவரது பூரண ஆதரவையும் பெறக்கூடியதாக அமைந்திருக்க வில்லே. பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை ஊட்டாத தன்மை, போன்ற குரல்களே புதுக் கவிதைகளில் ஒலிக்கின்றன என்று அவர் உணர்ந்து அவ்வப்போது தன் கருத்தை வெளியிட்டும் வந்தார்.

அனைத்தையும் 'மார்க்ஸியப் பார்வையில் கண்டு தனது முடிவுகளே அறிவிக்கும் ஆற்றல் பெற்ற பேராசிரியர் நா. வானமாமலே, எழுத்து பிரசுரம் ஆன புதுக்குரல்கள்? உள்ளடக்கத்தை ஆராய்ந்து விரிவான கட்டுரை ஒன்று எழுதினர். புதுக் கவிதையின் உள்ளடக்கம் என்ற அந்தக் கட்டுரை 1968 டிசம்பர் தாமரை”யில் வெளியா யிற்று. -

அக் கட்டுரையின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு. * முதலாவதாக, புதுக் கவிதைகள் அடி நாதமாக ஃப்ராய்டிஸத்தையும் அதன் அம்சங்களைக் கொண்ட ஸ்ர்ரியலிலம், எக்ஸிஸ்டென்ஷியலிலம் போன்றவற்றை யும் கொண்டிருக்கின்றன. அதனுல் இக் கவிதைகள் அகவய நோக்கு கொண்டிருக்கின்றன. இதனுல் இக் கவிஞர்கள் தம்மைத் தாமே சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொண்டு சமுதாயத்தை ஒரு பார்வையாளன் போலக் கவனிக்கிருர்கள்.

இரண்டாவது உற்பத்தி, உறவுகளினுல் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினுல் உலகமே முக்கியமான இருவேறு வர்க்கங் களாகப் பிரிந்து நிற்கின்றது. ஒரு வுர்க்கம் இன்னுெரு