பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இலங்கை முற்போக்கு இலக்கிய மாசிகை மல்லிகை 1973 ஆண்டு மலரில் அவர் எழுதிய புதுக்கவிதை-அதன் தோற்றம் நிலைபாடு பற்றிய ஒரு குறிப்பு என்ற கட்டுரையின் கடைசிப் பகுதி இது.

அச்சு யந்திர நாகரிகத்தின் வளர்ச்சி நியதிகள் புதுக் கவிதையின் தோற்றம் வளர்ச்சியைத் தவிர்க்க முடியாதவை யாக்கின. ஆளுல் இவ்வளர்ச்சி அத்தகைய நாகரிக வளர்ச்சியினைப் பூரணமாக அனுபவித்த சமூகங்கள் பண் பாடுகளுக்கே உரியதாகும்.

கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில் சிறப்பாக இந்தியாவினப் பொறுத்த மட்டில் மேற்கூறியன மேனுட்டுத் தாக்கங்கள் என்ற முறையிலேயே முதன் முதலில் வந்தடைந்தன. நாவல் என்னும் இலக்கிய வகை தோன்று வதற்கான சமூகச் சூழ்நிலை தோன்றுவதற்கு முன்னரே நாவல் என்ற இலக்கிய வகை இந்திய மண்ணை வந் தடைந்தது போன்று, இன்று புதுக் கவிதை என்னும் இலக்கிய வடிவமும் வந்து சேர்ந்துள்ளது.

புதுக் கவிதை தோன்றுவதற்கான சமூகப் பின்னணி இத்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் தோன்றியுள்ளதா என்று பார்ப்போம்.

நமிழ் நாட்டில் எழுத்தறிவு வீதம் என்னவென்பது எனக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. ஆனல் அது அறுபது விதத்துக்கு மேல் இருக்குமோவென ஐயுறு கின்றேன்; அப்படிக் கொண்டாலும் முப்பத்தைத்து நாற்பது விகிதத்தினர் தானும் கட்புல நாகரிக நிலைக்கு இன்னும் வரவில்லையென்றே கொள்ள வேண்டும். மேலும் இயந்திரப் புரட்சியோ கைத்தொழிற் புரட்சியோ தமிழ் நாட்டின் பாரம்பரியச் சமூக பொருளாதார அமைப்புக்களை முற்றிலும் மாற்றிப் புதிய ஒரு யந்திரமயமான நாகரிகத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் உறுதி. இயந்திர மய நாகரிகத்தின் ஒரு முக்கிய அம்சமான நகர நாகரிக வளர்ச்சி சென்னையைத் தவிர (கோயம்புத்துரும் உட்