பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.24%

படலாம்) மற்றைய தமிழ் நாட்டுப் பேரூர்களைப் பெரிதும் தாக்கியிருப்பதாகக் கூற முடியாது. அங்குள்ள முத லாளித்துவ வளர்ச்சி நிலவுடைமையை, அன்றேல் நில வுடைமையுறவுகளைப் பயன்படுத்தும் நிலையிலேயே இன்றும் உள்னது.

மேற்கூறிய நிலைமையைப் பொதுப் பண்பாக எடுத்துக் கூறிஞலும் இதனுள் ஒரு சிறிய புறநடைத் தன்மையை நாம் அவதானிக்கலாம். அதுதான் சென்னையின் நகர நாகரிக வளர்ச்சியாகும். நகர வளர்ச்சியின் (அர்பன சேஷன்) தவிர்க்க முடியாத அம்சங்களான தனி மனிதப் பராதீனம், விற்பனை துகர்வாளர் உறவு முதலியன சென்னை நகர வட்டத்துள் காணப்படுவது உண்மையே. மேலும் சென்ஆன நகரநிலையில் மேனிலையடைந்த மக்களும், அவர்கள் வழியை நகர வாழ்க்கை அளிக்கும் வாய்ப்பினுல் பின்பற்றக் கூடியவர்களும் பம்பாய், தில்லி, கல்கத்தா முதலிய நகரங்களுக்குச் சென்று அங்கும் நகரவாசிகளாகவே வாழு கின்ற தன்மையினைக் காணலாம். அத்தகைய சமூகத் தினரும் பிற நகரவாசிகளும் பாராம்பரியத்திலிருந்து பராதீனப்படுத்தப்பட்டவர்களாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அண்மைக் காலத்தில் தமிழகத்து இலக்கிய வளர்ச்சி நெறிகளில் தில்லியின் தாக்கத்தினே நாம் காண் கின்ருேம், கணையாழி தமிழகத்துக்குப் புறம்பான நகர நகர நாகரிக வாசனையை ஏற்படுத்துகின்றது.

தமிழகத்துப் புதுக் கவிதைப் பயில்வாளர்களேத் த்னி மனிதர்களாக எடுத்து அவர்களது சமூக, பொருளாதாரப் பின்னணிகளே ஆராய்வது உருசிகரமான ஒரு முயற்சியாக அமையுமென்றே நம்புகிறேன்.

இத்தகைய சூழ்நிலையில், இயந்திர நாகரிகத்தின், நகர நாகரிகத்தின் ஆதிக்கத்துக்குட் பட்டவர்கள் புதுக் கவிதைப் 'பயிற்சியில் இறங்குவது தவிர்க்க முடியாப் பண்புே. நகர நாகரிகம் இன்று எலிற்றிசிம் எனும் மேன்மக்கள்

Ча-46