பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

அன்றேல் அடிநிலை மக்களே ஆற்றுப்படுத்தல என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவிலலை.”

(கா. சிவத்தம்பி) மார்க்ளியேப் பார்வையும், சமூக விஞ்ஞானக் கண் ைேட்டமும் பெற்றிராத இதர இலக்கியவாதிகளுக்கு எதிராக, எல்லா மக்களும் ஒரு புதிய வாழ்வைப் பெறு வதற்கு உதவியாக, போர்க்குனத்துடனும், புரட்சித் தன்மையுடனும் இலக்கியம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட முற்போக்கு எழுத்தாளர்", ஏனைய இலக்கிய வடிவங்களே தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது போலவே, வளர்ச்சி பெற்று வருகிற புதுக் கவிதையையும் ஒரு ஆயுதமாகக் கையாள வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் ஆசிரியர் குழுவினர் *தாமரை”யின் பக்கங்களே புதுக் கவிதைக்குத் தாராளமாக ஒதுத்கினர்கள். லட்சிய வேகமும், கொள்கைப் பற்றும், சமூகத்தை மார்க்ஸியப் பார்வையோடு, சீரமைக்கும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் பலர் உற்சாகமாக புதுக் கவிதை படைக்கலானுர்கள்.

நவபாரதி, புவியரசு, பரிணுமன், மு. பாவாணன், விடிவெள்ளி, கை. திருநாவுக்கரசு, பிரபஞ்சகவி, கோ. ராஜாராம், மு. செந்தமிழன் என்ற பலர் உணர்ச்சித் துடிப்போடு தாமரை”யில் கவிதைகள் படைத்திருக் கிருர்கள். நா. காமராசன், சிற்பி, அக்கினிபுத்திரன், தமிழ்நாடன், மீரா சக்திக்கனல் போன்றவர்களின் கவிதை களும் தாமரை”யில் வந்துள்ளன. அக்கினிபுத்திரனும் தமிழ், நாடனும், சொந்தப் படைப்புகளைவிட, மொழி பெயர்ப்புக் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிருர்கள். சார்வாகன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர் களின் கவிதைகளும் அபூர்வமாக இடம் பெற்றுள்ளன.

சபுதுச்குரல்கள்’ கவிஞர்களின் உள்ளடக்கம் குறிப் பிட்ட ஒரு சில எண்ணிக்கையினுள் அடங்கிவிடுவதாக, நா. வானமாமலை தனது விமரிசனத்தில் குறைகூறியிருக்