பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5శ్రీ

துவைக்கும் கல்லும் வரளுகின்றன . என்னைப் போல் அவளில்லா வெறுமையில், பாலகுமாரன், வளர வளர, ஒட்டமும் தொனி விசேஷமும் கொண்ட கவிதைகள் படைப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். மு.இளமரங்கள் தென்னே' ஆகிய இரண்டும் முக்கியமானவை.

தென்னே உச்சியில் பச்சை மட்டை ராட்கூடிஸ் மூக்காய் விடைத்துக்கிடக்கும் முந்தின மட்டை விட்ட இடத்தில் வெள்ளைப் பள்ளம் வாயாய்ச் சிரிக்கும் சுற்றிலும் மூக்குகள் வெள்ளே வாய்கள்’ *தென்னம் பாளையில் அடங்கிக் கிடந்த பூக்கள் ஒரு நாள் சீறி வெடிக்க சத்திய புருஷன் பரம்பரை யென்று அணில்கள் ஓடுது சமரசம் செய்ய.” தென்ன? கவிதையில் உள்ள நயமான வரிகளில் இவை சில.

'கசடதபற’ மூலம் தெரியவந்த கவிஞர்களில் மற்றும் ஒருவர் கலாப்பிரியா, என்னுடைய மேட்டு நிலம்’ கவனிப்புக்கு உரிய, புதுமையான ஒரு படைப்பு.

என்னுடைய மேட்டு நிலம் நேற்றுப் பெய்த மழையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது என்னுடைய மேட்டு நிலத்தை, இன்றை வெயில் நெருப்பால் வருத்திக்கொண்டிருந்தது (என்னுடைய மேட்டு நிலம் நாளைய வெறுமையில்? தவம் புரிந்து கொண்டிருக்கும்) என்னுல்-அதன் எல்லா அனுபவங்களேயும் உணர முடிகிறது.