பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

'கசடதபற'வின் புள்ளி பற்றியும், அதை பின்பற்றி வெளிவந்த ஏனைய மினி வெளியீடுகள் பற்றியும் உரிய இடத்தில் விரிவாக ஆராய்வேன்.

32. மேலோட்டமான பார்வை

'எழுத வேண்டும் ஒரு புதுக்கவிதை என்ருெரு கவிதை-பாலா எழுதியது- தீபம்’ இதழ் ஒன்றில் பிரசுர மாகியுள்ளது. ஒரு புதுக் கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், "என்ன செய்யலாம்? என்று யோசிக்கும் முறையில் அது எழுதப்பட்டுள்ளது.

'செக்ஸ் ஜோக்குகள் சேகரிக்கலாமா? எலியட்டிற்கும் யேட்சிற்கும் பவுண்டிற்கும் அப்டைக்குக்கும் தமிழ் வாழ்வு தரலாமா? அம்மாவிடம் பாட்டியிடம் விடுகதைகள் வேண்ட லாமா? மலையாளக் கவிஞரிடம், வடமொழிப் புலவரிடம் வார்த்தை வரம் வாங்கலாமா?

பாரசிக ரோஜாவை பாடும் புல்புல்லே கிப்ரான் காலிஃபை ஒட்டகத்தின் கூன் முதுகில் உட்கார்த்திக் கொண்டுவந்து எங்களுடெ மண்ணில் இறக்குமதி செய்யலாமா?

பண்டிதப் புலிகளைச் சீண்டிட வசைப்பதங்கள் இசைக்க லாமா? இலக்கிய இதழ்களில் வரும் வார்த்தைகள் தோண்டி, வாக்கியங்கள் கோக்கலாமா?

பூமியைப் புரட்டி அது செய்வோம் இது செய்வோம் 6了怒” சுய தம்பட்ட ஜோஸ்யம் சொல்லலாமா?