பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

என்ன செய்யலாம்-ஒரு புதுக் கவிதை எழுத வேண்டும்’ என்று பரிகாசத் தொனியில் அது அமைந்துள்ளன. அது. வெறும் பரிகாசம் மட்டுமல்ல. உண்மை நிலையை உள்ள படி சித்திரிக்கிறது என்றே சொல்லலாம்.

புதுக் கவிதைக்குக் கிடைத்த வரவேற்பையும், புதுக் கவிதை என்று எழுதப்பட்ட எதையும் பிரசுரிக்கத் தயாராக இருந்த பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள், எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரை யும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் அரிப்பும் கொண்டவர்கள், மூன்று வரிகளும் நான்கு வரிகளும், ஒருசில வரிகளும், எழுதி சுலபத்தில் பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள். சிரமமும், சிரத்தையும் பயிற்சியும் பாடு படலும் இல்லாமலே எழுத்தாளர் என்ற கீர்த்தியை அடைந்துவிட விரும்பியவர்களுக்கும் புதுக் கவிதை: எழுதுவது லட்சிய சித்திக்கு வகை செய்யும் சுலப மார்க்க மாகத் தோன்றியது இந்த காலத்தில். ஆகவே, செக்ஸ் விஷயங்களேயும், ஜோக்குகளையும், விடுகதைகளையும், வார்த்தை அலங்காரங்களையும், தமிழ்ச் சொற்களோடு பிற மொழிச் சொற்களைத் தாராளமாகக் கலந்து எழுதுவதையும் கவிதை என்று தரப் பலரும் தயங்கவில்லை.

கவிதைகளில் ஆங்கிலச் சொற்களே அதிகம் விரவி sosol gith, 353,600gāGojöö Dejection, The split. Oh! that first love. The Great Expectations gräärug, Gursi, ஆங்கிலத் தலைப்புகள் கொடுப்பதும் சகஜமாயிற்று.

பூமியெனும் காதலி மழையெனும் showeால் குளிப்பது கண்டு வானமெனும் காதலன் lâsörssrGso flash light shes "க்ளிக்’ என்றே ஒரு Snap எடுத்தான். 'மின்னல் என்ற இக்கவிதை ஒரு உதாரணம் ஆகும். விடுகதை"யாகக் கூறப்பட வேண்டியவற்றை வக்கிர விரிவுரை சாமர்த்தியமான விளக்கங்கள், குறும்புத்தனமான