பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

உறவுக்குப் பிறந்த ஊமைச் சிறுவிளக்கு என்றும், இன்னும் விதம் விதமாகவும் பணித் துளிகளைக் கண்டு மகிழ்கிருர்.

இவ்விதம் உற்சாகத்தோடு எப்பவாவது ஒன்றிரண்டு தனிக் கவிதைகள் எழுதிவிட்டுத் திருப்தியோடு ஒதுங்கிப் போகிறவர்கள், எப்படியும் எழுதி முன்னேற முயல்வது என்ற தீர்மானத்தோடு எழுதுகிறவர்கள் எண்ணிக்கை எழுபது களின் ஆரம்ப வருடங்களில் அதிகம்தான். இதை இலக்கியப் பத்திரிகைகளின் பக்கங்கள் நிரூபிக்கின்றன,

இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோ இனத் தேர்கள் தனிமொழிச் சேனே பண்டித பவனிஇவையெதுவும் இல்லாதகருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்கனாட்சி முறையே

புதுக் கவிதை: என்று மு. மேத்தா ஞானரதம்’ இதழ் ஒன்றில் எழுதி யிருக்கிருர், -

கருத்துக்கள் மிளிர, புதிய முறையில் கவிதை படைக்க முயன்று வெற்றிகரமாக வளர்ந்து வருகிறவர்களே இனி கவனிக்கலாம்.

எஸ். வைதீஸ்வரன் கணையாழி, தீபம், கசடதபற, ஞான ரதம், அஃ ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் அவ்வப்போது கவிதை எழுதியுள்ளார். .

"வாழ்வை தன்னையிழந்து நோக்கும்போது ஒரு கவி மனத்தில் அனுபவப் புல்லரிப்புகள், எத்தனையோ நேருகின்றன. அவைகளைக் கவிதையாக இனங்கண்டு கொள்வதும், அதை மொழியால் மொழி பெயர்த்து கவிதை பண்ணுவதும்” ஆன காரியத்தில் அக்கறையோடும் ஆர்வத் துடனும் ஈடுபடும் இவர் இயற்கைக் காட்சிகள் எழுப்பும்