பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

6

காட்டு விலங்கு வேட்டையும் நாட்டின் விலங்கு மேய்த்தலும் அவர் தொழிலாம்

பகை மூண்டால் ஆநிரை கவர்தல் போர் முறையாம்! இயற்கைப் புணர்ச்சி உரிப்பொருளாம். மலையில் காட்டில் x எதுவும் எதுவுடனும் உறவுப் பாத்திகளின்றி உடலேறி உயிர் நடுதல்போல் யாரும் யாருடனும்

கூடலாகுமாம்! அதுவே இயற்கைப் புணர்ச்சியாகுமாம் சட்டத்தில் சிக்குண்ட கண்ணுடி சில் சில்லாய் உடைவதுபோல் உள்ளத்தில் பதிந்த படிமம் பொல போலவென உதிர்கிறதே!.

காட்டு மிராண்டிகள் வாழ்ந்த காலம் தமிழர் வாழ்வில் பொற் காலம்!

இதைச் சங்க இலக்கியம் சொல்கிறதாம்!

இதை & * நம்ப வேண்டுமாம் நாமெல்லாம்:

தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி எழுதிப் பிரசித்தி பெற்ற மு. மேத்தா தீபம்’ இதழ்கள் மூலம் நன்கு அறிமுகமாகியுள்ளார். மிகுந்த கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற அவரது கண்ணிர்ப்பூக்கள் "மரங்கள் போன்ற நீண்ட கவிதைகளும், ஓர் அரளிப்பூ அழுகிறது. காதலர் பாதை, உனக்கான உதிரிப்பூ போன்ற சிறு கவிதைகளும், தீபம்’ இதழ்களில் வெளி வந்தவைதான். மகாத்மாவின் சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டு மனம் குமைந்த மேத்த தேசப்பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் மறு அஞ்சலி என்ற சோக கீதத்தையும் இசைத்துள்ளார்.