பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மாற்றங்களுக்கான கருத்து மாற்றங்களே-வடிவமாற்றங் களைப் படைப்பது சிருஷ்டி கர்த்தாவின் உயிரினும் மேலான உரிமை என்பதை எக்காளமிட்டு எடுத்துக் கூறுவோம். மரபறிந்து மரபெதிர்க்கும் போக்கு உணராத வர்கள் இலக்கிய வரலாற்றின் எந்த அம்சத்தையும் அறி யாதவர்கள்.

ஒரே சமயத்தில் சமுதாயக் கண்ைேட்டமும் புத் திலக்கிய நோக்கும் கொண்ட ஒரு கவிதை இயக்கம் எங்களுடையது.” -

அமானுடம் பாடும் வானம்பாடிகள்’ என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்ட கவிஞர்களின் அறிவிப்பு இது.

"நிகழ்காலத்தின் சத்தியங்களையும் வருங்காலத்தின் மகோன்னதங்களையும் தரிசிப்பதற்காக உண்மையும் உணர்ச்சியுமே இருசிறகாய் கொண்டு, கவிதை வானத்தில் சஞ்சரிக்க முன்வந்த முற்போக்கு கவிஞர்களே வானம் பாடிகள்.

சமுதாய அவலங்களைக் கண்டு, தார்மீகக் கோபம் கொண்டு, தங்கள் உள்ளத்தின் உணர்ச்சிகளுக்குக் கவிதை வடிவம் தர முயன்ற இக்கவிஞர்களின் விலை இல்லாக் கவிமடல் தான் வானம்பாடி'.

எரிமலையின் உள்மனங்களாய்

அக்கினித் காற்றில் இதழ் விரிக்கும்

அரும்புகளாய்

திக்குகளின் புதல்வர்களாய்

தேச வரம்பற்றவர்களாய்

அஞ்சாத அமில நதியின்

அலேப்படைகளாய்

மண்ணின் பூக்களாய்

பூமியின் பிரளயங்களாய்

காலத்தின் வசந்தங்களாய்

யுகத்தின் சுவடுகளாய்

நிறங்களில் சிவப்பாய்

மண்ண வலம்வரும் பறவைகளாய்

மானுடம பாடிவரும் வானம்பாடிகளின்

விலையிலாக் கவிமடல்