பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

களில் ஆரவாரச் சொற்களே அநாவசியமாக அள்ளிக் கொட்டுவதிலும் அடுக்கி வைப்பதிலும் ஆர்வம் காட்டிவிடு கிரு.ர்.

உதாரணத்துக்கு ஒன்று குறிப்பிடலாம்; "இமயச் சிகரங்களின் வெண்புதர் புற்றுகளில் சில்லென்று தலைநிமிர்த்தும் பனிப்பாம்புகளின் பிளவுண்ட நா துணிகளின் விஷக்கடிகள்ால் இந்த தேசத்தின் தேகம் நீலம் பாரித்துப்போன ஒரு மயக்க இருள் தழுவிய முயக்கத்தில் இந்த மண்ணின் ஆத்மா உறைந்துவிட்ட ஒரு மான நிழலில் படிந்த முற்றத்தில், விதவைத் தெருவின் புழுதியின் ம்ேலே வஞ்சிக்கப்பட்ட எம் பூமியின் மழலை எப்படிப் படுத்திருக்கும்? எப்படிப் படுத்துறங்கும் (புதிய போர்வை) சக்திக்கனலின் ஒரு ரோடு ரோலரின் பவனி, தமிழன் பனின் நயனதாரா, கங்கை கொண்டானின் சில நைலான் கனவுகள் எரிகின்றன. பிரபஞ்சனின் "துவங்காத புயல் களின் பிரார்த்தனைகள்’, பா. செயப்பிரகாசத்தின், மக்கள் கவிஞனுக்கு ஒரு விண்ணப்பம் மு. மேத்தாவின் தாலாட் டுக் கேட்காத தொட்டில்கள்' போன்ற பல இனிய கவிதை களே வானம்பாடி’ தந்துள்ளது.

வானம்பாடிக் கவிஞர்கள் இன்றைய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் கண்டு கோபம் கொள் கிருர்கள், பரிகசிக்கிருர்கள் பழித்துக் குறை கூறுகிருர்கள். இன்றைய இழிநிலை மாறவேண்டும் என்று ஆசைப்படுகிறர் கள், சுரண்டலையும், சுரண்டல் சமுதாயத்தைப் i iirĝi காக்கும் தத்துவங்கள் கடவுள்கள், சாதி சமயங்கள் முதலிய வற்றையும் கண்டிக்கிருர்கள்; விமர்சனம் செய்கிருர்கள். காந்தியையும் ஏசுவையும் கண்ணனையும் புதிய நோக்கில் கண்டு, சிந்தனைகளை வளர்க்கிருர்கள்.

நீளம் நீளமான கவிதைகள் எழுதுவதில் உற்சாகம் காட்டிய வானம்பாடிக் கவிஞர்கள் பின்னர் சிறுசிறு சிந்தனை