பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287

தமிழ் நாடன் போன்றவர்களது படைப்புகளே இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தமிழ் நாடன் நட்சத்திரப் பூக்கள்’ என்று எழுதியுள்ள

துண்டுக் கவிதைகள் ரசம் நிறைந்தவை.

வாயெல்லாம்

மின் பல்லாய்

வானம்

பதிகுலு நாள் இளித்தால்

பிறைத் துண்டு

வெல்லக் கட்டியொன்று

பிச்சை விழும்.

சின்ன நட்சத்திரமே சின்ன நட்சத்திரமே! கோடி நாட்களாய் ஜொலிக்கத் தவிக்கும் குட்டி நட்சத்திரமே! அம்மா மாமா யாரும் இல்லையோ? கோடம்பாக்க புரோக்கரைப் பாரேன். குறைந்த நாட்களில் குண்டு நிலா ஆகலாம். 5uf@「卵ず6活r பொற்காசுகள் விட்டெறிந்து விட்டெறிந்து பார்ப்பான், ராக்கிழவி எப்படியம்மா ஒப்புவது

என்றுள்ளம் வேர்ப்பாள். அடிமேல் அடி போட்டால் காசால்... நிலாமகள் மாதவியாய் விலை போனுள் ஓர் நாள்,

நட்சத்திரப் பூக்களில் இவை சில.