பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

காலகாலமாக, கதை கவிதை எழுதுகிற படைப்பாளிகள் கையில் படாத பாடு படும் சில விஷயங்கள் உண்டு. அவற்றில் அகலிகை கதையும் ஒன்று வெவ்வேறு கால கட்டங்களில், கவிஞர் கதைஞர் நாடகாசிரியர் அநேகர் அவரவர் கற்பனைக்கும் மனுேபாவத்துக்கும் கண்ணுேட்டத் துக்கும் ஏற்றபடி அகலிகை கதைக்குப் புது மெருகு தீட்டி, மகிழ்ந்திருக்கிருர்கள். இப்பொழுது வானம்பாடிக் கவிஞர் ஞானியும் அகலிகையை கவனித்துள்ளார். வரலாற்றில் உடமையும் உழைப்பும் பிரிந்த நிலையில்-ஆதிக்கமும் அடிமைத் தனமும் ஏற்பட்ட நிலையில்-உடலும் உள்ளமும் பிளவுண்ட நிலையில் -ஆணும் பெண்ணுமாக மனிதன் சிதைந்த நிலையில்-தெய்வங்களும் பேய்களும் விரிந்த நிலையில் - இவை ஒவ்வொன்றிலும் மற்றதன் உண்மை சிக்கித் தவித்த நிலையில், மனிதனின் அவலமே இந்தப் படைப்பாக கிளைகள் விரித்திருக்கிறது. இந்த முறையில் அகலிகை வரலாற்றின் ஆத்மாவாகிருள்."

ஞானியின் கல்லிகை காவியத்தை இவ்விதம் அறிமுகப் படுத்துகிருர் அக்கினிபுத்திரன், -

உழைக்காமலே உல்லாசமாகவும் சோம்பேறித்தனமாக வும் பொழுது போக்கி வாழ்கிறவர்கள். அவர்களின் பிரதி நிதியாக கெளதமன் சித்திரிக்கப்படுகிருன். இந்திரன், உழைப்பவர்களது-உழைப்புமூலம் சூழ்நிலையில் புதுமைகள் புகுத்துவோரின்-உருவகம். -

  • உலக வாழ்வை உதறி எறிந்து வீர வாழ்வை விளையாட் டாக்கி விட்ட இனத்தார்.

நிலத்தைக் குடைந்து இரும்பைக் கண்டு ஆற்றை மடக்கி வயலிற் பாய்ச்சி காளையைக் கட்டி ஏரில் பூட்டி வித்துக்கள் தேடி விளைவைப் பெற்று ஆடை புனேந்து அணிகலன் செய்து வீட்டை யமைத்து வியன் நகர் கண்டு தேட்டைப் பெருக்கிய தேவேந்திரனே,