பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

உழைக்க விரும்பாத முனிவர்களுக்கும், உழைக்கும்படி கட்டாயப்படுத்திய இந்திரனுக்கு மிடையே நிகழும் போராட்டம் பற்றியும் அவள் சொல்கிருள்.

'காட்டுச் சிந்தனைப் புதர்களே வெட்டி, வாழ்வின் நேர் பாதையை வகுப்பதற்கே வச்சிரம் எடுத்ததாகச் சொன்ன இந்திரன் அகலிகை மனசைக் கவர்ந்து, அவள் உடலுக்கும் மிகுந்த சுகானுபவம் தருகிருன்.

இந்திரனே வெற்றி கொள்ளக் கருதிய முனிவர், "எங்கும் எப்பொருளாகவும் எவராகவும், எல்லா இயக்க மாயும் இருக்கும் இறைவனைக் கற்பித்து, இறைவன் ஆட்சியை எழுப்பி, இந்திரனுக்கெதிராக நிறுத்தி, இந்திரன் உட்பட எவரும் அவனன்றி அசைவதற்குரிமையில்லை’ என்று முழங்கினர்.

அகலிகை மூலம் இதைக் கேட்டறிந்த இந்திரன். "ஞானத்தாடியை அசிங்கமாய் வளர்த்த முனிவனக் கண்டவன் அவளே விட்டு ஓடின்ை.

பலமற்ற மனத்தரையிலிருந்து ஆத்திரப்புயல் கிளம்பிய சொற் புழுதியை சாபம் என்று வீசினன் முனிவன். அவனே அவள் வெறுத் தாள். அவளிடம் இன்பம் அனுபவித்தும், அவளது இதயத்தை உணரத் தவறி விட்ட சுரண்டல் மன்னன்’ இந்திரனேயும் கரித்துக் கொட்டினுள்.

இது காலம் காலமாக நடந்து வருகிறது. உலகம் எனதே என உரத்து முழங்கும் ஒருவன், நீயே இறைவன் என்னும் இன்ைெருவன்; இருவரின் காலடியில் ஒரு அளுதை மனிதன். நெறிபடும் அவன் கண்களில் அகலிகை முகம் தெரிகிறது:

இருவர் தன்மைக்ளேயும், அவர் செய்த கொடுமை களையும் விவரித்துச் செல்கிறது கவிதை, உள்ளத்தை உயர்த்த விரும்பியவர் உடலே மதிக்கவில்லை. உடலை மதிக்க வந்தவன் உள்ளத்தை கெளரவிக்கவில்லை,