பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

கவிதைத் தலைப்புகள் அநேகம் அழகாக அமைத்திருக் கின்றன. தலைப்புக்கள் ரசனேமிக்கவை. பக்குவமான தலைப்புகள் சில நேரங்களில் கவிதைகளை விட அழகாக அமைந்துவிடுகின்றன என்று இத்தொகுப்புக்குப் பாராட் டுரை வழங்கியுள்ள பா. செயப்பிரகாசமும் குறிப்பிட்டிருக் கிரு.ர்.

மூன்ருவதாக விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம்) பொதிகை அடி'யில் வசித்த கல்லூரி மாணவர்கள் நாலு பேர் (சுப்பு அரங்கநாதன், எஸ். வேலுசாமி, தா. மணி,-MiSS-எம், ஐ. எஸ். சுந்தரம்) பத்திரிகைகளில் வந்திராத தங்கள் கவிதைகளைத் தொகுத்து "உதயம் என்ற பெயரில் வெளி u%: i_mit56;r. ‘A modern emotiouai lace’ storm & go கொண்ட இவர்கள் தங்கள் கவிதைகளில் இனிய உணர்வு களையும் சுகமான நினைப்புகளையும் கலந்திருக்கிருர்கள். இவர்களுடைய படைப்புகளில் பல பாராட்டத் தகுந்த விதத்தில் அமைந்துள்ளன.

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் எஸ். எஸ். சுந்தர், ச. முருகன், மயிலவன் மலர் மன்னன்) கதம்பம் என்ற தொகுப்பைப் பிரசுரித் தார்கள். -

இந்தக் கதம்பத்தில் மல்லிகையும் இருக்கும்; முல்லையும் இருக்கும், மருக்கொழுந்தும் இருக்கும்; அரளிப் பூவும் இருக்கலாம்! என்று அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளி யிட்டுள்ளனர். பல ரகமான பொருள்களையும் பற்றிய சுவையான எண்ணங்கள் இக் கதம்பத்தில் உள்ளன.

ராஜபாளையத்திலிருந்து, கொ. ச. பலராமனின் கவிதை களைக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு ரசிகன் என்ற பெயரில் வெளிவந்தது. இதன் வடிவ அமைப்பு முந்தியவைகளி லிருந்து மாறுபட்டது. கவிதைகளும் 'கசடதபற’ கவிஞர் களின் போக்கிலிருந்து மாறுபட்டவை. எல்லாம் மணி தனுக்காக, மனிதவர்க்கத்தின் நன்மைக்காக, என்ற அடிப் படையில் மனிதாபிமானத்தோடும், சமுதாய மூடப் பழக்க