பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

35. புத்தகங்கள்

பத்திரிகைகளில் எழுதுவதோடும், சிறு சிறு தொகுப்பு களாக வெளியிடுவதோடும் திருப்தி காணுத நிலைமை ஏற் பட்டுவிட்டது கவிதை எழுதுவோரிடையே. எனவே தங்கள் கவிதைகளே புத்தகங்களாகத் தொகுத்து வெளியிடு வதில் புதுக் கவிதைக்காரர்கள் ஆர்வம் காட்டலானுர்கள். 1970களின் ஆரம்பம் முதலே இந்ந ஆர்வம் செயல் வேகம் பெற்று வந்துள்ளது. .

புதுக் கவிதை வரலாற்றில், முதல்முதலாக ந. பிச்ச மூர்த்தியின் கவிதைகளைத் தொகுத்து காட்டுவாத்து என்ற புத்தகமாக சி. சு. செல்லப்பா வெளியிட்டார். இந்த எழுத்து பிரசுரம் 1982ல் பிரசுரமாயிற்று. (ஆகஸ்டில்)

அதை அடுத்து, 196 அக்டோபரில் புதுக் குரல்கள்’ என்ற எழுத்து பிரசுரம் வெளிவந்தது. 24 கவிகளின் 63 கவிதைகள் கொண்டது.

ந. பிச்சமூர்த்தியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'வழித்துனே 1964ல் பிரசுரமாயிற்று. இதுவும் எழுத்து பிரசுரம்தான். 1955ல் தி. சோ. வேணுகோபாலன் கவிதை கள் கோடைவயல்’ என்ற புத்தகமாக உருப்பெற்றன. எழுத்து பிரசுரமான இதில் 29 கவிதைகள் உண்டு. இவை பற்றி இத்தொடரில் அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன். 1970ல் எஸ். வைதீஸ்வரன் தனது கவிதைகளே "உதய நிழல்' என்ற தொகுதியாக வெளியிட்டார். இதில் 62 கவிதைகள் இருக்கின்றன.

நா. காமராசனின் கறுப்பு மலர்கள் 1971ல் வெளி வந்தது. மரபுக் கவிதைகளோடு, நா. கா. எழுதிய வசன கவிதை"களும் இதில் அடங்கியுள்ளன. அஞ்சலி, செம் மண், பிச்சைக்காரி, குடிகாரன், புல் நடைபாதை, தளிர், புழுதி, ஊமை, வானவில், விலைமகளிர் போன்ற பல் விஷயங்களைப் பற்றியும் அவர் எழுதியிருக்கிருச்.

ஷண்முக சுப்பையாவின் குழந்தைக் கவிதைகள் 25 கண்ணன் என் தம்பி என்ற புத்தகமாக 1972ல் பிரசுர