பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299'

கலாப்ரியாவின் கவிதைகள் தீர்த்த யாத்திரை’ என்று தொகுப்பு உருவம் பெற்றன.

"எழுத்து பிரசுரம் புதுக்குரல்கள் தொகுப்பு மதுரை பல்கலைக் கழகம் எம். ஏ. தமிழ் வகுப்புக்குப் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. அதனுல் சி. சு. செல்லப்பா புதுக் குரல்கள் இரண்டாம் பதிப்பை 'திருந்திய பதிப்பு’ ஆகப் பிரசுரித்தார். r

தமிழன்பன் கவிதைகள் தோணி வருகிறது என்ற தொகுப்பு ஆயின. கலாநிதி க. கைலாசபதி புதுக் கவிதை பற்றிய ஒரு சிறு ஆய்வுரையை இதற்கு முன்னுரையாக அளித்திருக்கிருர்.

இராஜபாளையம் இலக்கிய நண்பர் த. பீ. செல்லம் தனக்குப் பிடித்தம தான் மிகுதியும் ரசித்த-புதுக்கவிதை களே, இலக்கியப் பத்திரிகைகள் பலவற்றிலிருந்தும் தொகுத்து எடுத்து, விதி' என்ற புத்தகமாக வெளியிட்டார். வல்லிக்கண்ணன் முன்னுரை.

1974ல், மு. மேத்தாவின் கவிதைகள் கண்ணிர்ப் பூக்கள்’ என்ற புத்தகமாகத் தொகுக்கப் பெற்றன.

கவிஞர் மீரா சமூக அவலங்களே, அரசியல் உலக அக்கிரமங்களை, ஊழல் பேர்வழிகளின் லீலைகளை எல்லாம் நகைச்சுவையோடு குத்திக் காட்டும் கவிதைகள் எழுதி யுள்ளார். அவற்றைத் தொகுத்து ஊசிகள்’ என்ற புத்தக மாகப் பிரசுரித்தார். இவர் எழுதிய காதல் கவிதைகள் முன்பே (197 ல்) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. -

துரை சீனிச்சாமியின் கவிதைகள் அந்தி’ என்றும், கே. ராஜகோபால் கவிதைகள் பசப்பல் என்றும், வல்லிக் கண்ணன் கவிதைகள் அமர வேதனே' என்றும் புத்தகங் கள் ஆயின. இவை எழுத்து பிரசுரம்'கள்.

சி. சு. செல்லப்பா, மகாத்மா காந்தியின் வாழ்க்கையை யும் இந்தியாவின் இன்றைய நிலையையும் சிந்தித்து எழுதிய * நீ இன்று இருந்தால் என்ற குறுங்காவியம் தனிப்