பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

"நாணல் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனலும் காளிதாஸ்ன் சொல்வது போல,

(புராணமித்யேவு நசாது ஸ்ர்வம்,

நசாபி காவ்யம் நவமித்யவத்யம்) "பழையது என்பதாலேயே எல்லாம் குற்ற மற்றவையல்ல. புதிது என்பதால் மட்டும் எல்லாம் பேசத் தகாதவை அல்ல என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன்."

இவ்வாறு பதில் அளித்த கவிதைத் தொண்டன் கு. ப. ராஜகோபாலன் தான். அவர் இதே கருத்தை பின்னர் தன் பெயரில் மேலும் சிறிது விரிவாக 'கலாமோகினி'யில் எழுதியி ருக்கிருர்.

இந்த விவாதம் பூராவும், ஆசிரியருக்குக் கடிதம் என்ற உருவத்தில், சொல்லுங்கோ’ எனும் தலைப்பில் தான் அச் சாகி வந்தது. - - -

பதினேராவது இதழில் விவாதத்திற்கு சம்பந்தம் இல்லா தது போன்ற கடிதம் ஒன்று பிரசுரமாயிற்று.

"ஐயா, தற்போது தங்கள் பத்திரிகை வாயிலாக ஒரு விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது. அந்த விவாதத்தின் முடி வைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆல்ை பாரதி ஒரு இடத் தில் ஸரஸ்வதியும் இலக்கியமும் என்ற தலைப்பில் சில வரி கள் எழுதியிருக்கிருர். அது தற்கால இலக்கியத்திற்கு (இலக் கிய மென்று கருதிச் செய்யப்படும் கவிகளுக்கு)பொருத்த மா?

அந்த வரிகள் வருமாறு:‘உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸ்ரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றுவித்து நமது வேள்வி யைக் காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோ வென்ருல் இத்தெய்வமே குலதெய்வம், அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோனைகளுக்காக சொல்ல வந்த பொருளே மாற்றிச் சொல் லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாகூடித்தை இழந்து விடுவான். யமகம், திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்