பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3&4

இவ்வாறு வளர்ந்து வந்த புதுக்கவிதை சில ஆண்டு களுக்குப் பிறகு சோர்வுற்றுத் துாக்கநிலை அனுபவித்தது. தோன்றி வளர்ந்த இலக்கிய சஞ்சிகைகள் மறைந்து போன தும், படைப்பாளிகளிடையே சோர்வு மனுேபாவம் தலே யெடுத்ததும் இதற்குக் காரணமாக அமையும். இக்காலப் பகுதியில், தமிழகத்திலும் புதுக்கவிதை முயற்சிகளில் தேக்க மும், புதுக் கவிதை எழுதுவோரிடையே உற்சாகமின்மையும் காணப்பட்டன. ஈழத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டி ருந்தது என்றும் கூறலாம்.

"எழுத்து சஞ்சிகை தோன்றியதும், தமிழ் நாட்டில் அறுபதுகளில் புதுக் கவிதை புத்துயிர்ப்பும் புது வேகமும் பெற்று வளரலாயிற்று. ‘எழுத்து ஈழத்தவர் பலரை புதுக் கவிதைப் படைப்பில் ஈடுபடச் செய்தது. தருமு சிவாரமு இ. முருகையன், நா. இராமலிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

1970-72 அளவில் ஈழத்தில் புதுக்கவிதை பெரு வளர்ச்சி கண்டது. எழுதுவோர் அதிகரித்தார்கள். மல்லிகை" முதலிய சஞ்சிகைகள் புதுக்கவிதைக்கு அதிக இடம் தந்து ஆதரிக்கலாயின. சமுதாயக் கிண்டல்களும், மிக மென்மை யான உணர்ச்சி (காதல் முதலிய வெளிப்பாடுகளும் கவிதை உள்ளடக்கம் ஆக இடம் பெற்றன.

1972ல் தென்னிலங்கையின் முதலாவது புதுக் கவிதை ஏடு என்று க வி-தை எனும் பத்திரிகை தோன்றியது. திக்குவல்ல கமால், சம்ஸ், நீள்கரை நம்பி, யோனகபுர ஹம்லா முதலியோர் இதில் எழுதினர்கள். உழைப்பாளி வர்க்கம் பற்றியும், சமூகக் குறைபாடுகள் பற்றியுமே பெரும் பாலும் கவிதைகள் எழுதப்பட்டன.

தற்போது புதுக் கவிதை பற்றிய கட்டுரைகள் பல எழுதப்படுகின்றன. தினகரன்’ பத்திரிகையில், 5 ஆண்டுக் கால புதுக்கவிதை வளர்ச்சி என்ற தலைப்பில் மு. சிறீபதி தொடர் கட்டுரை எழுதினர். வரலாற்று அடிப்படையில் பதுக் கவிதை சம்பந்தமான முதல் ஆய்வுக் கட்டுரை இது தான் என்றும் அறிவிக்கப்படுகிறது.