பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

கலாநிதி க. கைலாசபதியின் மேற்பார்வையோடு, செ. யோகராஜா எழுதியுள்ள ஈழத்துப் புதுக் கவிதையின் சில போக்குகள்’ என்ற கட்டுரையில் காணப்படும் சில கருத்துக் களை இங்கு எடுத்து எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். -

'ஏறத்தாழ, கடந்த பதினைந்தாண்டுக் கால ஈழத்துப் புதுக் கவிதை வளர்ச்சியில் அவதானிக்கத்தக்க சில பண்பு களுள், இவற்றை மதிப்பீடு செய்யும்போது தமிழ் நாட்டுப் புதுக் கவிதைப் போக்கிலிருந்து வேறுபட்ட சில பண்புகளே யும், தனித்துவப் போக்குகளையும் இனங்காண முடிகிறது.

இன்றைய ஈழத்துப் புதுக் கவிதையாளருள் பெரும் பாலானேர் எழுத்து சஞ்சிகையின் தாக்கத்தால் எழுதத் தொடங்கியவர்களே. "எழுத்தில் வெளிவந்த புதுக்கவிதை களே புதுக் கவிதை எழுதும் உந்துதலேயும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. எனினும், எழுத்து காட்டிய வழியில் இவர்கள் செல்லவில்லை; எழுத்தில் பெரும்பாலானேர் எழுதியது போன்ருே, அல்லது இன்னும் எழுத்துப் பரம்பரை யினர் சிலர் எழுதுவது போன்றே, தனி மனித அக உளேச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், மரணம், விரக்தி, காமம்’ போன்ற விஷயங்கள் ஈழத்துப் புதுக் கவிதையின் உள்ளடக்கமாக அமையவில்லே. மாருக, சமுதாய நோக் குடைய - ஏதோ ஒரு விதத்தில் சமுதாயக் குறைபாடுகளைப் பிரதிப்பலிக்கிற~புதுக் கவிதைகளே இங்கு மிகுதியாக வெளி வருகின்றன. ஈழத்து நாவல் சிறுகதை என்பவற்றில் காணப்படும் seriousness தன்மை ஈழத்துப் புதுக் கவிகளிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

யாப்பு, முறிவு, சொற் செறிவு, கருத்து முதன்மை முதலியன மட்டுமின்றி, படிமம் குறியீடு ஆகியவற்றையும் கொண்டமையும் போதுதான் புதுக் கவிதை என்பது முழுமை எய்துகின்றது. தமிழ் நாட்டுப் புதுக் கவிதை வளர்ச்சியில் இத்தகைய பண்பு எழுத்து சஞ்சிகை வெளிவந்த பின்பு தான் இடம் பெறத் தொடங்கியது. ஆயினும். புதுக் கவிதை

புது-20