பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இவைகளே எல்லாம் பொறுமையுடன் படித்துப் பார்க்கிற இலக்கியப் பிரியர்களுக்கு ஒன்று தெளிவாக எளிதில் விளங்கி விடுகிறது. இன்று கவிதை எழுதக் கிளம்பியுள்ள வர்களில் பெரும்பாலருக்கு கருத்துப் பஞ்சம் கற்பனை வறட்சி மிகுதியாக இருக்கின்றன. கவிதை உணர்ச்சி இல்லை. சொல்லப்படுகின்ற விஷயங்களில் புதுமையும் இல்லை, உணர்ச்சியும் இல்லை.

இவ் இலக்கிய வெளியீடுகளே எல்லாம் தொடர்ந்து படிப்பதோடு, அயல் நாட்டு இலக்கியங்களே ஆங்கில மூலம் அறிந்து கொள்கிற பழக்கம் பெற்ற ரசிக நண்பர்கள் சிலர் அடிக்கடி குறிப்பிடுகிருர்கள்: தமிழில் கவிதை எழுதுகிறவர் கள் திரும்பத் திரும்பச் சில விஷயங்களேயே தொட்டுக் கொண்டிருக்கிருர்கள். சிலிர்ப்பூட்டும் விதத்தில் நுட்பமான உண்மைகள், நுண் உணர்வுகள், கிளர்வு தரும் புதுமைகள் மென்மையான வாழ்க்கை அனுபவங்கள் முதலியவற்றை - அயல் நாட்டுக் கவிதைகளில் ரசிக்கக் கிடைக்கிற இனிய, அருமையான பலரக விஷயங்களே. இவர்கள் தொடுவது கூட இல்லையே; ஏன் என்று கேட்கிருச்கள்.

தமிழில்-கவிதை மட்டுமல்ல, சிறுகதைகளும்கூடஎழுத முற்படுகிறவர்களுக்கு இலக்கிய வளமும் இல்லை. வாழ்க்கை அனுபவமும் போதாது. பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி தேவையே இல்லே என்று ஒதுக்கி விடுகிருர்கள். இது வளர்ச்சிக்கு வகை செய்யாத எண்ணம் ஆகும். புதுமை இலக்கியத்திலும், தங்களுக்கு முந்திய தலைமுறையினரின் சாதனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் இவர்களில் பெரும்பாலோருக்கு இல்லை. உலக இலக் கியத்தை அறிந்து கொள்ளும் தாகமும் துடிப்பும் மிகக் குறை வாகவே காணப்படுகிறது. கூரிய நோக்கும், விசால மனுே பாவமும் இல்லாததனால், தமக்கென வாழ்க்கை பற்றிய கொள்கையோ பிடிப்போ தத்துவப் பார்வையோ லட்சிய உறுதியோ இவர்களில் பலரால் கொள்ள முடிவதேயில்லை. இக்குறைபாடுகள் இவர்களது எழுத்துக்களிலும் பிரதிபலிக் கின்றன.