பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3} {

கவிதை மூலம் வெளியிட முடியும் என்ற உணர்வு மரபுக் கவிதை எழுதி வத்தவர்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது. மரபுக் கவிதை எழுதிப் பெயர் பெற்ற அநேகர் அதை ஒதுக்கிவிட்டு புதுக் கவிதை எழுதி வெற்றி கண்டிருக் கிருர்கள். பல பெயர்களே இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். புதுக் கவிதையின் வரலாறு இவ்வாறு இருக்கிற போது, அதன் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்று நான் கருது கிறேன். இது எனது பதில்.

இந்தத் தகவலே இவ்வரலாற்றுக்கு சரியான முடிவுரை ஆகும் என்று எனக்குத் தோன்றுகிறது.