பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஏது? அதனல் தான் தீ இனிது என்பதை உணர்ச்சி ஒப்புக் கொள்ளுகிறது.

இப்பொழுது கம்பரைக் கேட்போம். அமுதம் நிறைந்த பொற் கலசம் இருந்தது இடைவந்து எழுந்ததென எழுந்த தாழி வெண் திங்கள் . என்கிருள் கம்பர். வசனம் என்று இதை வைத்துப் பேசிளுல் அமுதம் என்பது உண்டா? பொற்கலசம் கடலில் மிதிப்பா னேன்? திருடர்கள் தொழில் மறந்து விட்டார்களா? பொற் கலசம் என்ன நீர்மூழ்கிக் கப்பலா-வேண்டும்பொழுது மேலே எழுந்து வர?- என்றெல்லாம் அறிவு கேட்கக்கூடும். அதனல் தான் உணர்ச்சி சொல்லுகிறது: இந்த வார்த்தைகள் உணர்ச் சியின் வெளியீடு. உணர்வின் உலகுக்குச் சமர்ப்பிக்கப் பட்டவை, உனக்கல்ல. கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதன் கம்பர் பாடியதைக் கடுகளவும் மறுக்க மாட்டான். -

ஆகவே சம்பிரதாயமான உருவம் கவிதையாக்குவதற்கு உதவியாக இருந்தபோதிலும் அடிப்படைகளைப் பற்றிப் பேசும்பொழுது கவிதைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம், எதனுடன் அது உறவாடுகிறது-அறிவுடனு உணர்ச்சியுடனு என்பதைப் பொறுத்தே நிற்கும். எவ்வளவுக்கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிருனுே அவ் வளவுக்கவ்வளவு வசனமாய்விடும். உருவத்தில் கவிதையாக இருந்தபோதிலும், இப்பொழுதெல்லாம் வசன கவிதை என்று பேசுகிருச்கள். உண்மையில் வசனமாக இருந்தால் கவிதை யாக இருக்க முடியாது. கவிதையாக இருந்தால் வசனமாக இருக்க முடியாது. ஆனல் புதுமையையும் பழமைக்குள் புகுத்தி சமரசம் செய்வதே மனித இயல்பாதலால் நடைமுறை யில் அவ்வாறு சொல்லுகிருச்கள் என்று சொல்லலாம். ஆகை யால் கவிதையின் குறியும் வசனத்தின் உருவும் கலந்த இப் புதுப்பிறவித்கு இந்தப் புதிய பெயர் கொடுத்திருப்பதை ஒரு இாது ஒப்புக்கொள்ளலாம்,