பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

கண்டனர். இந்த முது முறையைத் தகர்க்க அவர்கள் முயன்றதாகத் தெரியவில்லை. - --

அசையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல. ஆனல் அது கருத்து மாத்திரமும் அல்ல. உதாரணமாக வ. ரா. வின் நடைச் சித்திரங்களில், நல்ல செய்யுள்களில் கூட இல்லாத அழகான கவிதைக் கருத்துகள் இருக் கின்றன. அதனுல் அதைக் கவிதை என்று விடலாமா? குமாரசம்பவம் போலவும், சிலப்பதிகாரம் போலவும், கு. ப. ரா வின் சிறுகதைகள் இனிக்கின்றன. ஆளுல் அதைக் கொண்டே அக்கதைகளைக் காவியங்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் மறுப்பாளர்களின் வாதம். அவர்களுக்கு துணையாக பழஞ்சுவடிகளான தொல்காப்பியச் செய்யுளியலும், யாப்பருங்கல விருத்தியும், தண்டியலங் காரமும் இலக்கணம் பேசுகின்றன.

அழகான புதுமைகளே ஆக்குவதில் அறிவு முனைகிறது. அதன் பயன்தான் இலக்கணக் கட்டுகளை உடைத்து விட்டு வெளிவந்த இப்புது முயற்சியும்.

இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இல்லாத அழகான அருமையான எண்ணங்கள் வசன கவிதைகளிலே காணக் கிடைக்கின்றன. சீர்பூத்த’ என்று தொடங்கி செய்யுள் இலக்கண முறைப்படி பனங்கொடுத்த எவனேயோ ஒரு பாவலர் பாடிய பரட்டுக்களே விட த8ளதட்டும் பூக்காரி' ஆயிரம் மடங்கு அழகாகத்தான் இருக்கிறது. இலக்கண வழுஊ ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு இவைகளே ஒதுக்குவது வடிகட்டின மடமை. இலக்கியப் பேழையில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய புது இரத்தினங்கள் இவ்வசன கவிதைகள்.

பழுத்த மாம்பழம் தித்திக்கிறது. பழுக்காத காய் புளிக் கிறது. இவைகள் இரண்டையும் நீங்களும் நானும் உண்டு சுவைத்திருக்கிருேம். ஆல்ை பழுத்தும் பழுக்காமலுமாய் செங்காயாக இருக்கும் பொழுது நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்