பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4i.

அருவி யாடியும் சுனேகுடைந்தும் அலர்வுற்று வருவேமுன் மலை வேங்கை நறுநிழலின்

வள்ளி போல்வீர் மனநடுங்க முலையிழந்து வந்து நின்றீர் :

யாவிரோ வென முனியாதோ மணமதுரையோ டரசுகேடுற

வல்வினேவந் துருத்த காலே கணவனையங் கிழந்து போந்த

கடுவினையேன் யானென்ருள்."

சிலப்பதிகாரக் குன்றக் குரவை'யில் வரும் உரைப் பாட்டு மடை இது. உரைப்பாட்டை நடுவே மடுத்தல்' என அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிருர். அரும்பத வுரையாசிரியரும் அதனே, உரைச் செய்யுளை இடையிலே மடுத்தல்’ என்பர். (வேட்டுவ வரி; 7 -ம் அடியின் பின் வரும் உரைப்பாட்டை’ப் பார்க்க) -

இன்னும் இவ்வாறே, ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை முதலியவற்றிலும் இவ்வுரைப் பாட்டு இடம் பெறு கின்றது. இவ்விதம் வரும் உரைப்பாட்டு எல்லாம் வசன கவிதை உணர்ச்சியையே உண்டாக்குவன. உரை. கட்டுரை என்பன வசனத்தையும், பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால், உரைப்பாட்டு-கட்டுரை செய்யுளென்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவன வெல்லாம் வசன கவிதையே என்று தெளிய இடமுண்டு. -

சிலப்பதிகாரப் பதிகத்தில் உரையிடையிட்ட பாட்டு டைச் செய்யுள்' என வரும் பகுதிக்கு உரையிடை இட்டன வும் பாட்டுடையனவுமாகிய செய்யுளே’ என்று கருத்துரைக் கும் அடியார்க்கு நல்லார், பின்னரும் உரைபெறு கட்டுரை' இவை முற்கூறிய கட்டுரை-இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள்’ எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

1-0-43-ல் வெளியான கலாமோகினி இதழில் வசன கவிதை பற்றி கலைவாணன் எழுதிய கட்டுரையின் எதிரொலி இது. "வசன கவிதை தமிழுக்குப் புதிது’ எனும்