பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨勢

புத்த பக்தி என்ற கவிதையை எழுதினர். அதையும், ஆஸ்தி ரேலியத் தொழிலாளி வர்க்கக் கவிதை ஒன்றையும் தமிழாக்கி நவசக்தி'யில் வெளியிட விரும்பினர் கே. ராமநாதன் அவ்வாறே செய்தேன்.

உறுமின முரசுகள்; வெறிகொண்ட மக்கள் கோர உரு ஏற்று பற்களைக் கடித்தனர்; சாவுக் கோட்டையில் மனித ஊன் சேர்க்கும் துடிப்புடன் ஒடும்முன் கூடி நிற்கின்ருர் புத்தன் முன்னிலே, கருணை வள்ளலின் ஆசிகள் வேண்டியே: வெளியே-- அண்டங்கள் அதிர பேரிகை முழங்குது:

என்று ஆரம்பித்து: வளரும் புத்த பக்தி'யின் கடைசிப் பகுதி

இது:

காயம் பட்டவர் செத்து வீழ்ந்தவர் கணக்கைக் காட்டிட அடிக்கடி விம்மி ஒலிக்கும் வீர எக்காளம் பெண்கள் பிள்இனகள் அங்கங்கள் இழக்கும் வார்த்தையைக் கண்டே பேய்கள் பிசாசுகள் கைகொட்டி நகைக்கும்

மனித மனத்திலே

பொய்மைப் புகை பரப்பவும், தெய்விகக் காற்றிலே நச்சு மனம் கல்க்கவும் பக்தி செய்கின்ருர்

4 - بقیه