பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感筑

திருலோக சீதாராம், 1944 டிசம்பரில் கிராம ஊழியனை விட்டு விலகி, திருச்சி சேர்ந்து சிவாஜி வாரப் பத்திரிதை யின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிச்சமூர்த்தி எப் பவாவது அவ்வார இதழிலும், 'சிவாஜி ஆண்டு மலரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.

யாப்பில்லாக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ந. பி. இலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தலாளுர், அதன்படி அவர் எழுதிய சில கவிதைகளும் ஊழியனில் பிரசுரமாயின.

1945-ல் அவர் அகலிகை கவிதைக்குப் புது அர்த்தம் கற்பித்து, அகலிகையை உயிர் என்றும், கோதமன மனம் என்றும், இந்திரனை இன்ப உணர்வுகள் என்றும் உருவகித்து, ஒரு காவியம் படைத்தார். கட்டிலடங்காக் கவிதைகளில் அமைந்த 'உயிர் மகன்’ என்ற அந்தப் படைப்பும் ஊழியன் இதழ்களில் வெளிவந்தன.

எம். வி. வெங்கட்ராமும் புதுக் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டினர். அவர் கவிதைகளே விக்ரஹவிநாசன் என்ற புனை பெயரில் எழுதினர். அன்னபூரணி சந்நிதியில்', அவரது கவிதைகளில் குறிப்பிடப் பெற வேண்டிய படைப்பு ஆகும்.

சிலா சுந்தரி, தேவி, அன்னபூரணி! *எனது நகைமுகமும் நிறை கலசமும் கலக்கு ஒர் இலக்கு ஆயின; காவியரும் ஓவியரும் எழுத முயன்று எழுதுகோல் தேய்ந்தது!

என்று மமதையுடன் நிமிர்ந்து நிற்ருேயல்லவா? நில்!

மண்ணையும் எங்கோ உள்ள விண்ணையும் ஒன்ருகப் பிணைப்பேன் என்று அன்று சிற்பி கண்ட கனவைத்தான் கண்ணும் எங்கோ கிடந்த கல்லும் கரனும் கொண்டு.