பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

(இந்தக் கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்து, இப்போது அது எனக்குப் பயன்படக்கூடும் என்று கருதி எனது பார்வைக்கு அனுப்பி உதவிய இலக்கிய நண்பர் ஒட்டப் பிடாரம் ஆ. குருசுவாமிக்கு என் நன்றி உரியது.)

பிச்சமூர்த்தி இயற்கையின் அழகுகளேயும் தன்மைகளே யும் நன்கு கண்டுணர்ந்தவர். வாழ்க்கையை விழிப்புடன் ஆராய்ந்தவர். இயற்கையும் வாழ்வும் கற்பிக்கும் பாடங்களே கவிதைக் கருத்துக்களாகத் தர முயன்றவர்.

அழகின் பக்தரான அவர் கூறுகிருர்: வாழ்க்கையும் காவிரி அதிலெங்கும் கிளிக்கூண்டு: வார்த்தையே மணல் ஓசையே ஜலம் என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள். பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்; அழகென்னும் கிளியை அழைத்தேன். ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன் அழகினே அழைப்பேன் நான் எந்நாளும், வாழ்க்கையை இயற்கை இனிமைகளே ரசித்து அனுப விக்கும்படி தூண்டுபவை அவர் கவிதைகள், ... - மனக்கிளியே! ஏங்கி விழாதே. சத்நியாசியின் மலட்டு வார்த்தையை ஏற்காதே. உடல் பஞ்சரமல்ல. புலன்கள் பஞ்சரத்தின் கம்பியல்லவெளியும் ஒளியும் நுழையும் பலகணி, தெய்வப் பேச்சு கேட்கும் காது. தெய்வ லீலையைப் பார்! அதோ வானத்துக் கோவைப்போல் பரிதி

தொங்குகிருன்! மலரின் மூச்சிலிருந்து மாட்டின் குமுறல்வரையில், குழவின் பேச்சிலிருந்து கடலின் ஒலம்வரையில்: நாதமே அசைகிறது; குரல் கொடுக்கிறது. ம்னமே! காய்கனிகளின் ரஸ்மே தெவிட்ட அமுதம்,