பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோனிக் கமுகு குறுக்கே படர்கிறது. பிறவி இருளைத் துளைத்து, சூழலின் நிழலே வெறுத்து, முகமுயர்த்தி, விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது. அமிர்தத்தை நம்பி, ஒளியை வேண்டி பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதுவே வாழ்க்கைப்போர்.

முண்டி மோதும் துணிவே இன்பம்.

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி."

ானும் கமுகு, சோனிக் கமுகு! - ႕န္ဟုခ္ရင္ဆိုႏိုင္ဆိုႏို பெரிய, பழைய, முதிய இருட்டு: பழமை என்ற பிரமையில், அரையொளியில், பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக் கின்றன!

அறிவின் சுயேச்சையை அமுக்குப் பிசாசுகள் எப்படி சிறைப்படுத்தி விட்டன:

எப்படி சுவடிகளின் குவியல் வசிக்கும் இடத்தைப் பறித்துக் கொண்டன!

எலும்பு தெரியும் ஏழ்மை எவ்வளவு ஏங்கி ஏங்கி அழுகிறது! நோயின் புலிக்குரல் எப்படி அஞ்ச வைக்கிறது!

உலகம் பொய், சாவு மெய் என்ற எவ்வளவு சாஸ்திரீயப் புலம்பல்! பின் சோனியாகாமல் என்ளுவேன்?

இருப்பினும், மனம் தேறுகிறது, சிறு கமுகின் போராட் டத்தைப் பார்த்து, உள்ளத்தில் தெம்பு. பிறக்கிறது. - . . اساس ای) سیاسی

போர் என்ற சங்கு முழங்குகிறது. அழகின் சிரிப்பு அண்டமாய்ப் பிறந்திருக்கிறது; அகண்ட ஒளி அதிையாய் மலர்ந்திருக்கிறது. ஆகும் ஆத்யாத்மமும் அழைக்கின்றன. ஜீவா விழியை உயிர்த்து, -