பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காரி குரலிகுெடு - கூடிற்று மழையின் கண்ணிர்’ - அதே மாதிரி 'ஊரெங்கும் விஷப்புகை, வானெங்கும் எஃகிறகு, தெருவெங்கும் பிணமலை, பிரங்கிக் குரல் பேசுகிற உலகச் சூழ்நிலையில் அன்பும் அகிம்சையும் பேச முற்படும் ஆதிக்குரல் அமுங்கி விடுகிறது.

எனினும், கவி நம்பிக்கையை இழந்து விடவில்லை. பிச்சமூர்த்தியின் கவிக்குரல் நம்பிக்கை வறட்சியோடு தொனிப்பது அல்ல. • . .

(உலகத்தார்) ருத்ரனின் வெறிக்கூத்தில் கடுமோகம் கொண்டுவிட்டார். -

காமனே எரித்த ருத்ரன் கண்சிமிட்டில் தணிந்து போவான் அன்பே சிவமாவான் - மங்கலமாய் மலர் தருவான், வேண்டுவோர் வாரீர் வாங்குவோர் கூடீர்!’ என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி செய்கிருர், ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி கூறுகிருர்:

எேஃகிறகின் உயரம், தெய்வக்குரல் ஏறவில்லை’ என்ருலும் என்ன! -

'நெஞ்சுடையாக் கனவுத் தெய்வம் கூவுதலைக் குறைக்கவில்லை. அன்பே சிவமாவான் மங்கலமாய்த் மலர்தருவான்.” என்று நம்பிக்கை வெளிச்சம் தர முயன்றிருக்கிருர் கவிஞர். - . . .

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை, துன்பத்தில் சலிப்புற்ற மனம் இன்பத்துக்கு ஏங்குவது இயல்பு. ës அப்படி ஆசைப்பட்டு இன்பத்தை நாடுகிறபோது அது துன்பத்தை எதிர்பாராத வகையில் அழைத்து வந்து விடுகிறதே! இந்த உண்மையை வர்ணிக்கிறது எமனுக்கு அழைப்பா!' என்ற கவிதை.