பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1.

வெப்பத்தில் வெம்பி வதங்கிய கவி ஈரத்திற்கேங்கி, வருணனை வேண்டினர். .

கருணை பிறந்தது:

மழை முகில் மிதந்தது. நெஞ்சத்தில் குளுமையின் ஊற்றுக்கண் வழிந்தது. அனல்பட்ட அறையினில் நளிர்முகம் கண்டது. இன்பம்தான். கூடவே, எறும்புப் பட்டாளம் புகுந்தது. பாச்சைகளும் பல்லிகளும் வந்தன. ஈசல்கள் பறந்தன. பல்லிகள் ஈசல்களைப் பிடித்துத் தின்றன. கவியின் சிந்தனை விழித்துக் கொள்கிறது. இப்போதுசித்தத்தில் தூண்டில்முள் சுருக்கென்று தைத்தது. ஈரத்திற் கேங்கிளுல் எமனுக்கு அழைப்பா! இன்பத்தை நாடினுல் துன்பத்தின் அணேப்பா? பிச்சமூர்த்தியின் இயற்கை வர்ணனைகளும், அவர் கையாளும் உவமைகளும் புதுமையாய் நயமாய் மிளிர்வன என்பதை அவரது சிறுகதைகளைப் படித்தவர்கள் உணர்த் திருப்பர். இச் சிறப்புக்களே அவருடைய கவிதைகளிலும் காண முடிகிறது.

'சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால் ஆற்று மணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது. பத்தரை மாற்றுச் சொர்ணப் பொடி போல் ரவி ஏற்ற மணல் காடு அங்கங்கே மின்னிற்று” மிேன்னல்கள் சிரித்து மேகத்தைக் கொளுத்தின; கூதலெனும் நாகம் குடையோடு சீறிற்று.