பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம

31

உணர்வு உலகத்தில் இன்னும் ஆழத் துழாவிப் பார்த்தார்கள். மென்மையானதும் சிக்கலானதும் கூட்டுக்கலப்பானதும் திட்டமான எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளச்சலையெல்லாம் சொல்லப் பார்த்தார்கள். கணக்கற்ற அணுக்களைப்போல எல் லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப்பதிவுகளை, மாறுபடும் இனந்தெரியாத, கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளிப்படுத்துவது தங்கள் கடமையென்று கருதினார்கள். அதே சமயம் புற உலகமும் அவர்களைப் பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள் பிரபஞ்ச விசாரணையில் புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஐக்கியத் தன்மை வாய்ந்தது என்பதோடு தொடர்ந்தே ஒடும் ஒரு தாரை, சென்றது நிகழ்வதுடன் பிணைகிறது. நிகழ இருப்பதன் வெளிக் கோட்டை உருவாக்க, ஒரு கணம், மறு கணம் என்றெல்லாம் இருந்தாலும் ஒன்றையடுத்து ஒன்றாக இடையறாமல் தொடர்நிலையாக ஒடிக்கொண்டிருக்கும் கணப் பொழுகளால் ஆனதுதான் வாழ்க்கை. ஒவ்வொரு நிகழ் கணப்பொழுதும், எல்லாக் காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கனப்பொழுதில், நின்று பார்க்கிற கவியின் பார்வையில் காலம் வெளி பிரண்டும், பேதமற்றுப் போய்விடுகின்றன, என்ற காலம், வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.
ஆக—அக, புற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்றாண்டு ஆரம்ப காலத்தவன், புதுக்கவியாக மலர்ந்தது மேல்நாட்டில் கவிதையுலகம் கண்ட அனுபவம். அது பூத்த பூக்கள் நிறைய......1920-30களில் மேல்நாட்டுப் புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டிஸம், மார்க்சீயம் இரண்டிலிருந்தும், மனோதத்துவ, லோகாயுத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது போல், தேசீயம் பாரதிக்கு உந்துதல் தந்தது!

இம்மேற்கோள் ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது. மேல் நாட்டுப் புதுக்கவிதைக்கு மார்க்சீயமும் ஃபிராய்டிசமும் உந்துதல் அளித்தது என்று கூறும் சி. சு. செல்லப்பா, நமது கவிஞர்களுக்கு ஃபிராய்டிசம்தான் அகநோக்கை ஆழமும் விரிவும் உடையதாகச் செய்தது என்று கூறுகிறார். ஆகவே இக்கவிஞர்கள் மார்க்சியத்தினால் உந்துதல் பெறவில்லை என்பது தெளிவு. எனவே, இவர்களது உள்ளடக்கத்தில் ஃபிராய்டின் பிரபஞ்ச—அறிதல் முறையும் தத்துவக் கோட்பாடுகளும்