பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நா. வானமாமலை

ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஃபிராய்டின் தத்துவத்தையும், அது கலை இலக்கிய உலகில் செலுத்தும் செல்வாக்கையும் இங்கு விரிவாக ஆராய்வது எனது நோக்கமல்ல. எனினும் ஃபிராய்ட் தத்துவத்தின் சுருக்கமான வரலாற்றையும், அதனால் பாதிப்புப் பெற்ற எக்சிஸ்டென் விதியலிசம், சர்ரியலிசம் என்ற கிளைத் தத்துவங்களையும் புரிந்துகொண்டால்தான் இப்புதுக்கவிதையின் உள்ளடக்கத்தை நாம் மதிப்பிடமுடியும். எனவே ஃபிராய்டிசம் தோன்றிய வரலாற்றையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் சுருக்க மாகக் குறிப்பிடுவேன்.

ஃபிராய்டிசம் மனோதத்துவக் கொள்கையாகப் பிறந்தது. இப்பொழுது மனித உள்ளத்தின் இயக்கம் முழுவதையும் விளக்குவதாக உரிமை கோருகிறது. இக்கொள்கையின் முத லாசிரியர் ஒரு நரம்பு நோய் வைத்தியர். தம்மிடம் வரும் அரைப் பைத்தியங்கள், நரம்பு அதிர்ச்சி நோயாளிகள், சித்தப் பிரமை பிடித்தவர்கள், சோகத்தில் மூழ்கியவர்கள், உறக்கமின்றிப் பயங்கரக் கனவு காண்பவர்கள் முதலிய பலவகை மன நோயாளிகளைப் பரிசோதித்து, அதன் அனுபவத்தைப் பொதுமைப்படுத்தி, மனநோயை ஆராயும் முறையொன்றை இவர் உருவாக்கினார். அதனை சைக்கோ அனாலிஸிஸ் என்று அழைத்தார். மனநோய்களைக் குணப்படுத்த ஒரு சிகிச்சை முறையையும் வகுத்தார். அதற்கு ‘லைக்கியாட்ரி’ என்று பெயர் கொடுத்தார்.

ஃபிராய்டு, முதலாளித்துவம் ஏகபோகங்களாக வளர்ச்சி பெற்றுவிட்ட காலத்தில் வாழ்ந்தார். ஏகபோகங்களின் போட்டியினால் சிறு தொழில் முதலாளிகள் திவாலாயினர். நடுத்தர வர்க்கத்தினர் சுதந்தரமான தொழில்களை இழந்தனர். இவ்வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் அழிவு அபாயத்தை எதிர்நோக்கி நடுங்கினர். இவர்கள் யாவரும் முதலாளித்துவ வளர்ச்சிக் காலத்தில் ‘தனி மனித சுதந்திரம்’ என்று முழங்கி யவர்கள். தங்கள் சுதந்திரம் போலியானது என்று அவர்கள் கண்டார்கள். உலக ஆதிக்கம் பெற்ற ஏகபோகங்களின் அடிமைகளாக வாழ இவர்களது தனி மனித—சுதந்திர உணர்வு இடம் தரவில்லை, அதே சமயம், ஏகபோகங்களை எதிர்த்து, ஒன்று திரண்டு அவற்றை அழித்து, தனிச் சொத் துரிமையை ஒழித்து, சோசலிச சமுதாயத்தை நிறுவப் போராடும் தொழிலாளி வர்க்கத்தையும் அதனோடு சேர்ந்து நிற்கும் மக்களையும் கண்டனர். இம்மனிதக் கடலில் ஒரு துளியாக இருக்க அவர்களது தனிமனித உணர்வு இடந்தர