பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

45

(Obscurity) என்ற பெருஞ்சிறப்பாக இவர்கள் போற்றுகிறார்கள்.

எவ்வளவுக்கு மறைபொருளாக யாருக்கும் விளங்காமல் கவிதையின் கரு இருக்கிறதோ, அவ்வளவுக்கு அது பரிபூரணமான கவிதையாம். இத்தகைய கவிதைகளில் ஓரிரு உதாரணங்கள் காட்டுவோம்:

கதவைத்திற காற்றுவரட்டும்
சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம் உடை
கடலோரம்
காலடிக்கு வடு
கதவைத் திற
காற்று வரட்டும் (ப. 49, சுந்தர ராமசாமி)

பல கேள்விகள் போட்டு மருட்டி இருட்டில் ஆழ்த்துவது இவர்களுடைய கூடார்த்த உத்திகளில் ஒன்று:

உண்மை எது பொய் எது?
எண்ணமா சொல்லா எது?
எண்ணமா சொல்லா
நினைவா கனவா
அல்லது உண்மை பொய்
எண்ணம் சொல் நனவு

கனவு எல்லாம் ஒன்றுதானா?

கவிஞர்கள், எழுத்தாளர்களை மனித குலத்தின் மனச்சாட்சி, உணர்ச்சியை ஆழப்படுத்துபவர்கள், தீமையை எதிர்க்க உத்வேகமளிப்பவர்கள், அறியாமையிருளை அகற்ற அறிவொளி பரப்புபவர்கள் என்றெல்லாம் தற்கால மக்கள் கருதுகிறார்கள். நம் நாட்டிலேயே பாரதியையும் தாகூரையும், அவர்கள் போலக் காலக்குரலாக முழங்கிய மற்றவர்களையும் மக்கள் இவ்வாறு மதிக்கிறார்கள். ஆனால் இக்கவிஞர்கள் எழுத்தாளனைப்பற்றியும் வாசகனைப்பற்றியும் என்ன கூறுகிறார்கள்?

இலக்கியம் செய்வதென்றால்

       எளிதில்லை எழுத்தாளா