பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

95

தள்ளி, எல்லோருக்கும் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கத் தகுதி வாய்ந்த சமுதாயத்தை நாமே உருவாக்குவோம் என்று நம்பிக்கையூட்டும் தொனியோடு பாடலை முடிக்கிறார்.

ஆனால் இந்த நிராசைக் கவிஞர், செருப்பில்லாத நிலைமை இயற்கை நியதிதான்; செருப்பு என்கிற ஆசை கோடை வந்ததும் தோன்றி, கோடை போனதும் போய்விடவேண்டியது தான் என்று கூறுகிறார். கோடை தோற்றுவிக்கும் உடல் உபாதைகள் போலத்தான் செருப்பு வேண்டும் என்ற ஆசையும் என்றுதான் கவிஞர் கருதுகிறார். இந்நிலை மாறவேண்டும் என்ற உணர்வைக் கவிதை தோற்றுவிக்கவில்லை. செருப்புத் தேவை என்ற ஏழையின் ஆசை, இயல்பாகவே கோடை போகும்போது மறைந்து விட வேண்டியது தானா? நிலைமையை மாற்றவேண்டும். மாற்றுவதற்குரிய உறுதிவேண்டும். இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்ற சமுதாய உணர்வு சிறிதும் கவிஞருக்கு இல்லை.

இவைதான் புதிர் கவிதைகள். ஒன்று கோபக்கனல் தெறிக்க வெளிவரும் நறுக்குக் கவிதை. அல்லது இயலாமையை வெளிக்காட்டும் இது போன்ற நிராசைக் கவிதை.

ஆழ்ந்த உணர்ச்சியோடு, சமுதாயச் சீர்கேடுகளை எண்ணி எண்ணி அசைபோட்டு இயலாத்தனத்தைக் காட்டும் கவிதைகளை, சில புதுக்கவிதை இலக்கண மரபு அணிகளை அணிவித்து எழுதுகிற கவிதைகள் சமுதாய உணர்வு, மனிதநேசம், வரலாற்று நோக்கு இவையெதுவுமில்லாத கவிஞர்களது படைப்புகளாக வெளிவருவது குறையவில்லை.

ஆனால் சமூகக்குறைபாடு கண்டு குமுறுகிறவர்களிடையே, இப்போது மக்களின் சக்தியில் நம்பிக்கையும் வரலாற்று நன் னம்பிக்கையும் (historical optimism) தோன்றியிருக்கின்றன, இவை சில சமயங்களில் தெளிவாகவும் சில சமயங்களில் சந்தேக மேகங்களிடையே ஒளியாகவும் தோன்றுகின்றன, மிகவும் பிற்போக்கான — மனித வெறுப்பு இணைவிழைவுக் குறியீடு, புதுக்கவிதைகளில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது. ஆயினும்கூட குதிரை ஏற்றத்தை மானிடப் புணர்ச்சிக் குறியீடுகளைக் கொண்டு விவரிக்க ஒரு கவிஞர் முயன்றிருக்கிறார்:

காற்றுப் பிதுக்கம் கிழிந்தது.
ஆவியாகிக் கரைந்த
திட
திரவ